நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் லடாக்கில் தொடங்குகிறது. இதில் அதிபயங்கர ஆக்ஷன் காட்சிகள் படமாகவுள்ளது. இதற்காக படக்குழுவினர் தற்போது லடாக்கில் முகாமிட்டுள்ளனர்.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்குவரும் என சொல்லப்படுகிறது. கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் நடிக்கும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.