மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரை விமர்சனம்
தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்.
வரலட்சுமி, மகத், சந்தோஷ் பிரதாப், யாசர், விவேக் அனைவரும் ஆசிரமத்தில் வளர்ந்த நண்பர்கள். வரலட்சுமி போலீசாக இருக்கிறார். ஒருநாள் மகத் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வரும் போது ஒரு ரவுடி கும்பல் பள்ளி மாணவியை கடத்தி குடோனில் வைத்துள்ளனர். இதனை பார்த்த மகத் அதனை வீடியோ எடுத்து மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் போய் சொல்கிறார். அங்குள்ள இன்ஸ்பெக்டர் அங்கு சென்று வில்லன் கும்பலுடன் சேர்ந்து மகத்தை கொலை செய்கின்றனர். இதனை அறிந்த வரலட்சுமி உள்ளிட்ட நண்பர்கள் இன்ஸ்பெக்டர் மற்றும் ரவுடி கும்பல் தலைவனை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இந்த திட்டம் பலித்ததா என்பதே கதை.
வரலட்சுமி சரத்குமார் போலீசாக நடித்துள்ளார். ஆனால் போலீசுக்கு உண்டான தோற்றம் கம்பீரம் இல்லை. நண்பர்களில் மகத் பரிதாபமாக வந்து உயிரை விடுகிறார். சந்தோஷ் பிரதாப் நட்புக்காக நடித்துள்ளார் போல. மற்றவர்களின் நடிப்பு ஓகே. கொலையை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக ஆரவ் பளிச்சிடுகிறார். கண்களாலே உணர்வுகளை கடத்துகிறார். இவருக்கு ஒரு நல்ல படமாக வந்துள்ளது. வாய்ப்பை பயன்படுத்தி உள்ளார். இவரது பின்கதை நமக்கே ஷாக்காக உள்ளது. திரைக்கதையில் முதல் பகுதி மெதுவாக செல்கின்றது.
இரண்டாம் பாதி நல்ல ட்விஸ்ட் உடன் விறுவிறுப்பாக செல்கிறது. சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு நன்று. பிரீத்தியின் எடிட்டிங் கச்சிதம். மணிகண்டனின் பின்னணி இசை சஸ்பென்ஸ் படத்துக்கான நியாயத்தை செய்துள்ளது. இன்ஸ்பெக்டராக நடித்துள்ள அமித் பார்கவ் மற்றும் ரவுடியாக நடித்த இயக்குனர் சுப்பிரமணிய சிவாவின் நடிப்பு சூப்பர். ஒரு போலீஸ் ஸ்டேஷனை சுற்றி சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்துள்ள இயக்குனருக்கு வாழ்த்துகள்.