தொலை நோக்கு பார்வை கொண்ட மீனா சாப்ரியாவின் ‘அன்ஸ்டாப்பபிள்’ புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் பிவியார் திரையரங்கில் நடைபெற்றது.
தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பிவிஆர் சினிமாஸ் பிராண்ட் அலையன்ஸ்ஸின் உதவித் துணைத் தலைவர் மீனா சாப்ரியா ஏழ்மையான தொடக்கத்திலிருந்து கார்ப்பரேட் உலகில் முன்னணிப் பாத்திரத்திற்கு வந்த தனது குறிப்பிடத்தக்க பயணத்தை விலாவாரியாக சொல்லி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்
மும்பையில் ஷில்பா ஷெட்டி ரிலீஸ் செய்த மேற்படி புக் தமிழ் பதிப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்..இவர்களுடன் உடை வடிமைப்பில் கொடி கட்டி பறக்கும் சினேகா நாயர் மைக் செட் ஶ்ரீராம் தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டார்கள்.
பொதுவாக ஒரு பெண் எழுத்தாளர் ஒரு புத்தகத்தை எழுதும் போது ஆண்களை மட்டம் தட்டி தான் எழுதுவார்கள் ஆனால் இவர் அவற்றில் இருந்து முற்றிலும் மாறாக ஆண்களை மிகவும் நேர்த்தியாகவும் தொலைநோக்குடன் எழுதியுள்ளார். ஒரு பெண் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி மட்டும் இந்த புத்த்கதில் இடம் பிடித்துள்ளது. அதோடு அவரின் வாழ்கையின் வெற்றி படிகளை மையமாக வைத்தும் எழுதியுள்ளார். பெண் சுதந்திரம் என்று பிதற்றாமல் ஆண்களின் கண்ணியத்தையும் எழுதி இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.