Wednesday, July 17
Shadow

மீண்டும் ஒரு காதல் கதை திரைவிமர்சனம் ( மனதை திருடியமீண்டும் ஒரு காதல் கதை)

 Rank 5/3.5மலையாளத்தில் மிக பெரிய வெற்றி படம் “தட்டத்து  மறயத்து” ரீமேக் தான் மீண்டும் ஒரு காதல் கதை 2012-ஆம் ஆண்டு மலையாளத்தில் 3.5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 36 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிய படம்

குட்டிப் பையனாக இருக்கும் போதே அழகான இஸ்லாமிய  குட்டிப்பெண்ணான இஷா தல்வார் மீது காதல் வயப்படுகிறார் வால்டர் பிலிப்ஸ்.

கட்டினால் அப்படி ஒரு அழகான பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்பது அவருடைய ஆசை. வளர்ந்து இளைஞன் ஆன பிறகு ஒரு திருமண வீட்டில் மீண்டும் இஷாவைப் பார்க்கும் வால்டர் அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

இஷா வால்டரை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து விட்டாலும் இஷாவின் கட்டுக்கோப்பான குடும்பத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. விஷயம் இஷாவின் அப்பாவும், பெரிய கையுமான நாசருக்குத் தெரிய வர கடுப்பாகும் அவர் வால்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விடுகிறார்.

அங்கே வால்டரை பிரித்து மேய்வார்கள் என்று பார்த்தால் மனோஜ் கே ஜெயன், சிங்கமுத்து உள்ளிட்ட காக்கிகள் உன்னோட காதல் உண்மையாக இருந்தால் நானே உங்களை சேர்த்து வைக்கிறேன் என்று உத்திரவாதம் தருகிறார்கள்.

தனது காதல் கதையை ப்ளாஷ்பேக்கில் சொல்கிறார் வால்டர். மதம் என்கிற பெரிய தடுப்பணையைத் தாண்டி காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

நிவின் பாலி நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள வால்ட்டர் பிலிப்ஸ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மிக திறமைவாய்ந்த ஹீரோ என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு தன் முதல் படத்திலே நடித்துள்ளார் . இஷா தல்வார் பின்னால் சுற்றுவதையே படம் முழுக்க செய்து கொண்டிருக்கிறார். அதைத்தாண்டி நடனத்தில் தேர்ச்சி காட்டுகிறார்.

இயக்குனர் ஜவஹர் மித்திரன் ரீமேக் படங்களுக்கு பேயவர் வாங்கியவர் தனுஷ் நடித்த குட்டி , யாரடி நீ மோகினி படங்களை ஏற்கனவே தெலுங்கில் இருந்து தமிழுக்கு ரீமேக் பண்ணி லாபம் மட்டும் இல்லமல் நல்ல பெயரும் வாங்கி தந்தவர் . அந்த வகையில் இந்த முறையும் தன் பங்கை மிகவும் தேர்ச்சியாக செய்துள்ளார். மலையாளம் வாசம் இல்லாமல் தமிழுக்கு ஏற்ப மாதிரி திரைகதை அமைத்து வெற்றி கண்டுள்ளார் என்று தான் சொல்லணும் அதிலும் ஹீரோ ஹீரோயின் தேர்வு படத்துக்கு மேலும் பலம் என்று தான் சொல்லணும் .

மனோஜ் கே ஜெயன் இந்த படத்தில் நல்ல போலீஸ் ஆகா நடித்துள்ளார். காதலுக்கு துணை போகும் நல்ல போலீஸ் ஆனால் சில இடங்களில் இவரின் நடிப்பு ரொம்ப செயற்கை என்று தான் சொல்லணும் .

படத்துக்கு மேலும் ஒரு பிளஸ் என்றால் அது ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள் அதைவிட படத்தின் பின்னணி இசை அருமை கதைக்கு ஏற்ப பின்னணி இசை

படத்தில் மிக பெரிய பலம் என்றால் அது படத்தின் ஒளிபதிவு  கைதட்டிப் பாராட்ட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் விஷ்ணு வர்மா தான். அவருடைய ப்ரெஸ்ஸான ஒளிப்பதிவில் நாயகி மட்டுமல்ல… ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட அழகாகத் தெரிகிறார்.

இன்டர்நெட் பேஸ்புக் ட்விட்டர் என்று இன்றய காதல் இருக்கும் சமயத்தில் லேன்ட் லைன் காதல் கடிதம் அதை எடுத்து செல்ல ஒரு ஆள் என்று வித்தியாசம் செய்துள்ளார்.  என்று தான்  சொல்லணும் .அதுக்கு முக்கிய காரணம் இயக்குனரின் காட்சியமைப்பு அந்த அளவுக்கு சுவாரிசம் கொடுத்துள்ளார் .

இதுவரை குடிகாரன் வில்லன் என்றுவரும் தலைவாசல்விஜய்  இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான பாத்திரம் என்று சொல்ல்ச்னும் சிலஸ் காட்சிகள் வந்தாலும் நெஞ்சில் நிற்கும் பாத்திரம் நாசர்  படத்துக்கு மிக பெரிய பலம் இஸ்லாமியர் வேடத்துக்கு அப்படியே கனகச்சித பொருத்தம் .

படத்துக்கு வசனங்கள் அருமை மிக பெரியபலம் ”பர்தாவை வெச்சு பெண்களோட உடம்பை வேணும்னா மூடலாம், ஆனா மனசை மூட முடியாது.” ”இங்க முடிவெடுக்கிற அதிகாரம் நம்மகிட்ட இல்லாதப்ப நாம ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்?” போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. இது போல் பல இடங்களில் மனசை தொட்டுள்ளார் இயக்குனர் .

இந்த படத்தின் முடிவு இப்படி தான் இருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு திரைகதை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி இதுக்காக இயக்குனரை பாராட்டவேண்டும் .

மீண்டும்  மனதை திருடிய  ஒரு காதல் கதை எல்லோரும் பார்க்க வேண்டிய காதல் கதை

 

Leave a Reply