Tuesday, July 21
Shadow

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மெர்சல்’ மீண்டும் திரையரங்குகளில்… ரசிகர்களுக்கு முன்கூட்டிய கொண்டாட்டம்!

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மெர்சல்’ மீண்டும் திரையரங்குகளில்… ரசிகர்களுக்கு முன்கூட்டிய கொண்டாட்டம்!

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் முதல் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவரது திரைப்பயணத்தில் முக்கிய இடம் பெற்ற ‘மெர்சல்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவான ‘மெர்சல்’ திரைப்படம் 2017 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து, விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. விஜய் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம், அவரது திரை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படைப்பாக அமைந்தது.

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வரவிருப்பதை முன்னிட்டு, ஜூன் 19 ஆம் தேதி ‘மெர்சல்’ மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சிட்டி செங்கல்பட்டு வெளியீட்டு வட்டாரத்தில் மட்டும் சுமார் 100 திரையரங்குகளில் படம் திரையிடப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரீ-ரிலீஸை KP Films மற்றும் KP பிரியங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் கென்னடி வெளியிடுகிறார். இதற்கு முன்பும் பல திரைப்படங்களை வெற்றிகரமாக வெளியிட்ட அனுபவம் கொண்ட அவர், ‘மெர்சல்’ ரீ-ரிலீஸை ரசிகர்களுக்கான ஒரு சிறப்பு கொண்டாட்டமாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.

காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம், இசை, கதை, சமூக கருத்துகள் மற்றும் விஜய்யின் பல்வேறு பரிமாணங்களால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பெற்றது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படைப்பாக வெளியான ‘மெர்சல்’, தற்போது மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களின் ஆரவாரத்தை சந்திக்க தயாராகி வருகிறது. முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் வாரத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த ரீ-ரிலீஸ், ரசிகர்களுக்கு ஒரு திரை விழாவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Mersal’ Returns to Theatres Ahead of Chief Minister Vijay’s Birthday; A Grand Celebration for Fans

As part of the celebrations leading up to Tamil Nadu Chief Minister Vijay’s first birthday after assuming office, his blockbuster film Mersal is set to make a grand return to theatres. The re-release announcement has generated tremendous excitement among fans, who continue to cherish the film as one of the actor’s most memorable works.

Directed by Atlee, Mersal was originally released during the 2017 Deepavali festival and went on to become a massive commercial and critical success. Featuring Vijay in three distinct roles, the film remains one of the most celebrated milestones in his cinematic career.

With Vijay’s birthday falling on June 22, the film is being re-released on June 19 as a special tribute to the occasion. In the City Chengalpattu distribution territory, covering Chennai, Chengalpattu, Kanchipuram, and Tiruvallur districts, the film is scheduled to be screened in around 100 theatres.

The special re-release is being presented by Kennedy under the banners of KP Films and KP Priyanka Productions. Having successfully distributed several films in the past, Kennedy aims to turn the re-release of Mersal into a memorable celebration for Vijay’s fan base.

The film stars Kajal Aggarwal, Nithya Menen, and S. J. Suryah in key roles alongside Vijay. Known for its engaging storyline, strong social message, chart-topping music, and Vijay’s powerful triple performance, Mersal continues to enjoy immense popularity among audiences.

Originally produced by Thenandal Films as the company’s landmark 100th production, Mersal is now gearing up to entertain fans once again on the big screen. The re-release is expected to transform Vijay’s birthday week into a festive cinematic celebration for moviegoers across the region.