Tuesday, March 21
Shadow

மெய்ப்பட செய் – திரைவிமர்சனம் ரேங்க் 2.5/5

மெய்ப்பட செய் திரைவிமர்சனம்

புதியவர்களின் புதிய முயற்சி முதல் முயற்சி சமுதாய அக்கறையுடன் வாழ்த்துகள்.

படத்தின் கரு பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவனுக்கு பதில் சொல்லும் படம்.

பொறுப்பு அற்று சுற்றி திரியும் நான்கு கிராமத்து இளைஞர்கள் இவர்களின் ஒருவருக்கு காதல் உண்டும் அந்த பெண் கல்லூரியில் படிப்பவல் இவர்கள் காதலுக்கு இரண்டு பெற்றோரிடமும் எதிர்ப்பு அதோடு இவர்கள் பக்கத்து பக்கத்து கிராமம் இதனால் கிராமத்துக்கும் சண்டை இதையும் மீறி இவர்கள் திருமணம் செய்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் நீங்கள் எப்படியாவது போங்கல் என்று சொல்ல பையன் அப்பா இந்த கிராமத்தை விட்டு போங்கல் கொஞ்ச நாள் கழித்து வாங்கள் என்று சொல்ல அதன் படி இவர்களும் கிராமத்தை விட்டு சென்னை வருகிறார்கள். இங்கு கட்டா கஜா பிரபல ரவுடி இவன் வீட்டில் வீடு வாடைகை எடுக்கிறார்கள். அந்த வீட்டில் ஒரு பெண்ணின் பிணம் புதைக்க பட்டு இருப்பது இவர்களுக்கு தெரிகிறது இதை போலீஸ் கிட்ட சொல்லும் போது எப்போதும் போலீஸ் உளவாளி கஜா விடம் சொல்லிவிடுகிறார் இதனால் இவர்களை கஜா ஆட்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இவர்களிடம் இருந்து தப்பிக்க முடிகிறதா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவனை என்ன செய்கிறார்கள் என்பது தான் முடிவு.

அனைவரும் புதிய முகங்கள் அருந்த முகம் என்றால் OAK . சுந்தர் சூப்பர் குட் சுப்ரமணி பயில்வான் ரங்கநாதன் இப்படி வெகு சிலர் மட்டுமே தெரிந்த முகங்கள். புதிய முகங்களாக இருந்தாலும் இயக்குனர் எண்ணம் அறிந்து செயல் பட்டுள்ளனர்

இயக்குனர் வேலன் முதல் படததிலேயே சமுதாய சிந்தனையின் கதைக்கு சபாஷ் போட வேண்டும் காட்சி அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் மேலும் சுவாறிசம் இருந்து இருக்கும்.

மொத்தத்தில் மெய்ப்பட செய்
பார்க்கலாம்