பாலியல் கொடுமை பெண்ணியம் பேசி வந்த தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி ஆக்ஷன் கலந்த செண்டிமெண்ட் படம் தான் மைக்கேல்.
சந்தீப் கிஷன் திவியான்ஷா கௌசிக், வரலக்ஷ்மி,விஜ
ய் சேதுபதி, கெளதம் வாசதேவ் மேனன், வருன் சந்தேஷ் மற்றும் பலர் நடிப்பில் சாம்.சி.எஸ் இசையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளிவந்த படம் மைக்கேல்
மும்பையில் பிரபல தாதா தான் கெளதம் வாசு தேவ் மேனன் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இருந்தும் இவருக்கு மேலும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் முதல் மனைவி தனது கணவனின் காதலியை கொலை செய்கிறாள் கர்ப்பிணியாக இருக்கும் அந்த பெண் அங்கு இருந்து தப்புபிக்குறால் இவளுக்கு எப்படி குழந்தை பிறந்து அந்த குழந்தை தான் சுதீப் கிஷன் இவன் தன் தந்தையை அம்மாவுக்காக பழி வாங்கும் கதை தான் இந்த படம்
சுதீப் கிஷன் தமிழில் அறிமுகம் ஆனாலும் அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை அதற்கான போராட்டம் தான் இந்த படம் என்று சொல்லாம். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தியுள்ளார். நடிப்பிலும் சரி சண்டை காட்சிகளிலும் சரி மிக கன கச்சிதமாக செய்துள்ளார். படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் அற்புதமான முறையில் வடியமைத்துளார் இயக்குனர். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
நாயகியாக வரும் திவ்யாயான்ஷா தமிழில் முதல் படம் அழகு நடிப்பில் ஜொலிக்கிறார்.
கெளதம் வாசு தேவ் மேனன் படத்தில் வில்லன் அவரின் தோற்றமும் அவரின் குரலும் கதாபாத்திரத்துக்கு முழுமை சேர்க்கிறது. ரியல் தாதாவை நம் முன் நிறுத்துகிறார்.
விஜய் சேதுபதி இரண்டாம் பாகம் வருகிறார் அவரின் மனைவியாக வரலக்ஷ்மி இருவருக்கும் சொல்லியா கொடுக்கணும் இல்லை இவர்களை பற்றி படத்துக்கு படம் இவர்கள் நடிப்பு பற்றி சொல்லனுமா இவர்களின் கதாபாத்திரங்கள் பற்றி சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரியசம் குறைந்து விடும் ஆகவே நீங்கள் திரையரங்கில் பார்த்து கொள்ளுங்கள்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் படத்தின் பலம் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி மிக அற்புதம் குறிப்பாக நாயகி அறிமுக காட்சியில் வயலின் பின்னணி இசை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி காதலையும் திரில்லரையும் எப்போதும் கலந்து கொடுப்பார். இதிலும் அதை குறைவைக்காமல் கொடுத்துள்ளார். இதில் கொஞ்சம் தாய் பாசத்தை கலந்து கொடுத்துள்ளார்.கதை ஏற்கனவே பார்த்த கதை என்றாலும் திரைக்கதை மிகவும் நம்மை பிரமிக்க வைக்கிறார்.