Friday, February 7
Shadow

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் – திரைவிமர்சனம்

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைவிமர்சனம்

முற்றிலும் புது முகங்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ஹவுஸ் கீப்பிங் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் மட்டுமே பழைய முகம் என்று சொல்லலாம் அதில் நாயகி லாஸ்ட்லியாவும் உள்ளார். யூட்யூபில் ஜம்ப்கட் என்ற பெயரில் பிரபலமானவர்தான் ஹரி பாஸ்கர் இவர் நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் தான் இந்த மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் இந்த ஹவுஸ் கீப்பிங் ரசிகர்களை ரசிக்க வைக்கிறதா இல்லை அரங்கத்தை விட்டு கிளீன் பண்ண வைக்கிறதா என்று பார்ப்போம்.

கதைக்குள் போகலாம்:
ஹரி பாஸ்கர் லாஸ்ட்லியா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் லாஸ்ட்லியாவை ஒருதலைப் பட்சமாக காதலிக்கும் ஹரி பாஸ்கர் அவரைக் கண்டாலே வெறுக்கும் லாஸ்ட்லியா கல்லூரியின் இறுதி நாளில் ஹரிபாஸ்கர் மீண்டும் காதலை சொல்ல லாஸ்ட்லியாவோ இந்த ஜென்மம் இல்லை அடுத்த ஜென்மத்திலும் நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு வெளியேறுகிறார்.

ஹரி பாஸ்கர் உடன் படித்த அனைவரும் மிக உயர்ந்த உத்தியோகத்தில் பணியாற்றுகிறார்கள். ஆனால் ஹரி பாஸ்கர் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்கிறார். ஹரி பஸ்கர் பணம் தேவைக்காக லாஸ்ட்லியா வீட்டிற்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு செல்கிறார் லாஸ்ட்லியா இவரை எப்படி வரவேற்கிறார் இவர்களின் காதல் மீண்டும் மலர்ந்ததா இல்லையா இந்த காதலுக்கு வில்லனாக பிக் பாஸ் புகழ் ரயான் இந்த ரயானை மீறி ஹரி பாஸ்கர் லாஸ்ட்லியா கரம் பிடித்தாரா இல்லையா என்பதுதான் மீதி கதை.

ஹரி பாஸ்கரின் திறமை நமக்கு ஏற்கனவே அறிந்தது அறிந்ததுதான் நல்ல நடிப்பு திறமையில் நகைச்சுவையும் நம்மை கவருகிறார் இந்த படத்தில் கதை ஓட்டத்தை புரிந்து இயக்குனரின் தன்மையைப் புரிந்து மிக அற்புதமாக கனகச்சிதமாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

லாஸ்ட்லியா படத்தின் நாயகி உடல் எடையை குறைக்கிறேன் என்று தான் அழகையும் மிகவும் பாதிக்க வைத்திருக்கிறார் இந்த படத்தில் மிகவும் வேதனையாக இருக்கிறது அவர்களின் திரையில் பார்க்கும்போது அந்த அளவுக்கு தன் உடலை வருத்தி இடையை குறித்து ரசிகர்களை கௌருவார் என்று பார்த்தால் ஆனால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டுகிறது. ஆனால் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் குறிப்பாக இரண்டாம் பாகத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் லாஸ்ட்லியா

ஹரி பாஸ்கர் அப்பாவாக வரும் இளவரசு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும் அற்புதமான தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதேபோல படத்தில் நடித்த அத்தனை பேரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக அறிமுகமாகும் ரயான் தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் நிச்சயம் தமிழ் சினிமா இவருக்கு கை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

படத்தின் இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட் பின்னாடி செயலும் சரி பாடல்களும் சரி அற்புதமாக கொடுத்திருக்கிறார் முதல் படத்தில் அவரும் முத்திரை பதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் அருண் ரவிச்சந்திரனுக்கு இது முதல் படம் படத்தின் கதையை வித்தியாசமாக அமைத்திருந்தாலும் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக அமைத்து இருந்தால் இந்த படம் விறுவிறுப்பாக இருந்திருக்கும் முதல் பாதியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கும் என்று சொல்லலாம். கார்த்திக்கு காட்சி காமெடி என்ற பெயரில் கத்துகிறார்கள். முதல் பாதியில் செய்த தவறை இரண்டாம் பாதியில் தவிர்த்து இருக்கிறார் மிகவும் சிறப்பாகவும் கதைக்களத்தை நகர்த்திருக்கிறார். காதல் செண்டிமெண்ட் அம்மா சென்டிமென்ட் என்று மிக அற்புதமான ஒரு திரைக்கதை மூலம் நாம் மனதில் இடம் பிடிக்கிறார்.

மொத்தத்தில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
இன்னும் கொஞ்சம் சுத்தம் செய்திருக்கலாம்.