Saturday, October 12
Shadow

கேஷ் வில்லன்ஸின் சிங்கிள் ஆல்பம் முடிஞ்சா பூரு!

கேஷ் வில்லன்ஸின் சிங்கிள் ஆல்பம் முடிஞ்சா பூரு!

திரைப்படம், ஆல்பம் என்று பல்வேறு துறைகளில் இசைப் பங்களிப்பு செய்து வரும் கேஷ் வில்லன்ஸ் தனது அடுத்த சிங்கிள் மூலம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே ஒரு ஸ்கூட்டர் வண்டி, ஈகோ போன்ற ஆல்பங்களின் மூலம் அழுத்தமான அடையாளத்தைப் பெற்று இருப்பவர்.

ஆல்பம் முயற்சிகளில் இதுவரை பங்களித்த வரைக்கும் பெரிய வெற்றி பெற்றுள்ளவர் கேஸ் வில்லன்ஸ் .அவரது அடுத்த படைப்புதான் இந்த ‘முடிஞ்சா பூரு’.

இந்த சிங்கிள் ஆல்பமான ‘முடிஞ்சா பூரு’ -ஐ உலகத் தரத்திற்கு உருவாக்கி உள்ளார். அதன் உருவாக்கம் பிரம்மாண்டமாக உள்ளது

இந்திய கலைத்தன்மையைத் தாண்டி மக்கள் மனதை எட்டிப் பிடிக்கும் வகையில் இந்த ஆல்பம் உருவாகி உள்ளதாக அவர் கூறுகிறார். யூடியூபில் இதற்குக் கிடைத்திருக்கும் வெற்றி அதற்கு நல்லதொரு சான்றாக உள்ளது.
யூடியூபில்வெளியாகி பிரபலமாகி இருக்கும் இந்த ‘முடிஞ்சா பூரு’ சிங்கிள் ஆல்பத்தை எழுதி இயக்கி உள்ளார் கேஷ் வில்லன்ஸ்.

இதற்குரிய வரிகளை கேஷ் வில்லன்ஸ், மானே வில்லன்ஸ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு
எல்விஸ் பிரேம்.
எடிட்டிங் ராம் வில்லன்ஸ்.