
சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலம்
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமாருடன் இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார்.
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் பிப்ரவரி 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இசை வெளியீட்டு விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ.ஜே மற்றும் ஹரி உத்ரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா படத்தின் இசையை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசியவர்கள்:
விநியோகஸ்தர் ஹரி உத்ரா:
இன்றைய சூழலில் நல்ல உள்ளடக்கமுள்ள திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது சவாலான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் ‘ஆழி’ முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்தும் திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
நடிகை தாமரைச்செல்வி:
இந்த படம் தன்னுடைய முதல் மேடை அனுபவம் என்றும், இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.
நடிகர் வையாபுரி:
சரத்குமாருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி இருப்பதாகவும், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகை தேவிகா சதீஷ்:
தமிழில் தன்னுடைய மூன்றாவது படம் ‘ஆழி’ என்றும், இதில் சரத்குமாரின் மகளாக நடித்த அனுபவம் சிறப்பானது என்றும் கூறினார்.
நடிகர் இந்திரஜித் ஜெகன்:
சரத்குமாருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும், அவரது ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா:
‘ஆழி’ என்றால் கடல். அதுபோல் சரத்குமாரின் நடிப்பின் ஆழமும் அளவிட முடியாதது என்றும், இப்படத்தில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டார்.
இயக்குநர் மாதவ் ரமா தாசன்:
தமிழில் தன்னுடைய முதல் திரைப்படம் இது என்றும், பெரும்பாலும் கடலில் நடைபெறும் கதையாக இருப்பதால் ஒலி வடிவமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறினார். இப்படத்தில் ஒரு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி:
சரத்குமார் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நடிகர் என்றும், இப்படத்தின் ஒலி அமைப்பிற்காக மூன்று முறை மிக்சிங் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகர் சரத்குமார்:
வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் இது என்றும், மீன்பிடி படகை மையமாகக் கொண்டு உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போது திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதாகவும், ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
Music Launch of Sarathkumar-starrer ‘Aazhi’ Held Grandly in Chennai
The music launch of Aazhi, starring Supreme Star Sarathkumar in a pivotal role, was held in a grand manner in Chennai.
Directed by acclaimed Malayalam filmmaker Madhav Ramadasan, Aazhi features Sarathkumar alongside Indrajith Jagan, Devika Sathish, Vaiyapuri, Thamaraiselvi, Sreejith Ravi, and several others. The film’s cinematography is handled by Anand N. Nair, while Jesse Gift has composed the music. Academy Award winner Resul Pookutty has designed the sound for the film.
Made as a crime thriller, Aazhi is produced by Sajith Krishnan under the banners 888 Productions and Celluloid Creations, and is distributed across Tamil Nadu by Uthra Productions. The film is slated for a worldwide theatrical release on February 27.
The music launch event was attended by the film’s cast and crew, along with special guests including South Indian Film Chamber of Commerce President Ravi Kottarakkara, director Udaya Sankaran, and distributors Abbas A.J. and Hari Uthra. Ravi Kottarakkara officially released the music, which was received by the dignitaries and the film team.
Speeches at the Event
Distributor Hari Uthra stated that releasing quality films in theatres has become increasingly challenging in today’s market, and that good content itself is hard to come by. He expressed confidence that Aazhi would mark a significant turning point. A longtime admirer of Sarathkumar, he said it was a pleasure to distribute the actor’s film and urged industry bodies to unite and evolve better business models for the welfare of Tamil cinema.
Actress Thamaraiselvi, addressing the audience for the first time on stage, thanked the director and producer for the opportunity. She recalled meeting Sarathkumar during Bigg Boss and said she felt proud to now act alongside him.
Actor Vaiyapuri shared his happiness at reuniting with Sarathkumar after many years. He mentioned playing a father’s role in the film and praised the director’s efficiency. He appealed to audiences to support the film upon its release.
Actress Devika Sathish said Aazhi is her third Tamil film and that she plays Sarathkumar’s daughter. She described him as both a co-actor and a father figure on set. She highlighted Resul Pookutty’s involvement as a major strength of the film.

Actor Indrajith Jagan expressed gratitude to the director for the opportunity and said working with Sarathkumar was an unforgettable experience. He described Sarathkumar as a huge inspiration, especially for his discipline, punctuality, and dedication.
Producer Ravi Kottarakkara drew a parallel between the depth of the sea and the depth of Sarathkumar’s acting. He noted that Sarathkumar has portrayed a wide range of characters throughout his career and continues to explore new dimensions even today. He praised director Madhav Ramadasan’s unique screenplay and Resul Pookutty’s sound design, which captures the very sound of the sea.
Director Madhav Ramadasan said Aazhi is his first Tamil film and that directing a Tamil movie had been a long-cherished dream. He explained that nearly 70% of the film takes place at sea, making sound design crucial. He shared anecdotes about the intense effort involved in recording realistic sound effects, including those of a dog that plays an important role in the film.
Sound Designer Resul Pookutty spoke fondly of Sarathkumar, praising his discipline, energy, and professionalism. He said he had mixed the film three times to achieve perfection and highlighted the collaborative spirit of South Indian cinema. He also complimented actress Devika Sathish’s screen presence and wished the entire team success.
Actor Sarathkumar, in his address, said he was drawn to the film because of its unique narrative and the director’s clarity of vision. He described Aazhi as a content-driven film without conventional commercial elements like songs or dance numbers, but with a grand story at its core. He spoke about evolving audience tastes and emphasized that acting remains the same across mediums. He revealed that he plays a character with negative shades in the film and urged audiences to experience this unique cinematic journey in theatres.
