Friday, September 11
Shadow

“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு

“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு

“என் கனவில் நான் நம்பிக்கை வைத்தேன்; அதனால்தான் இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது” – ‘மகுடம்’ படத்தின் நிகழ்வில் விஷால் நெகிழ்ச்சி

நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களில் பயணித்த விஷால், தற்போது இயக்குநராகவும் தனது புதிய பரிமாணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஷால் தனது 35 ஆண்டுகால இயக்குநர் கனவு, படத்தின் உருவாக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள், தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘மகுடம்’ திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு முதலில் நன்றி தெரிவித்த விஷால், தன் மீது அவர் வைத்த நம்பிக்கையை குறிப்பிட்டார். மேலும், கடந்த 14 மாதங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட காலகட்டத்தில் தனக்கு துணையாக இருந்து, இந்தப் பயணம் முழுவதும் உறுதுணையாக இருந்த தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

“இந்தப் பயணத்தில் எனக்கு துணையாக நின்றவர்களை ஒருபோதும் மறக்க முடியாது” என்று குறிப்பிட்ட விஷால், திருப்பூர் சுப்பிரமணியன் தன் மீது வைத்த நம்பிக்கையும் அளித்த ஊக்கமும் தன்னை மேலும் உழைக்கத் தூண்டியதாக தெரிவித்தார். அவர் வழங்கிய வாய்ப்பும் ஆதரவும் ‘மகுடம்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்ததாகவும் விஷால் கூறினார்.

இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய விஷால், ‘மகுடம்’ தனக்கு மிகவும் சவாலான திரைப்படம் என குறிப்பிட்டார். கேமராவுக்கு முன்னால் நடிகராகவும், கேமராவுக்குப் பின்னால் இயக்குநராகவும் ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டியிருந்ததால் அதிக உழைப்பு தேவைப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் காட்சிகளை படமாக்கும்போது, நடிகர்களிடம் வழக்கமான முறையிலிருந்து மாறுபட்டு சில நொடிகள் இடைவெளி விட்டு நடிக்கச் சொன்னதாகவும், அது பின்னர் எடிட்டிங் பணியில் தனக்கு உதவியாக இருந்ததாகவும் விஷால் தெரிவித்தார்.

இயக்குநராக படத்தின் பல்வேறு துறைகளிலும் தலையிட்டு பணியாற்றியபோதும், தன்னுடன் பணியாற்றிய கலைஞர்கள் யாரும் அதை ஈகோவாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். இசை, சண்டைக்காட்சிகள், நடிப்பு என பல்வேறு துறைகளில் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அந்த ‘ஈகோ இல்லாத கூட்டுப் பணியே மகுடத்தின் பலம்’ என்றும் விஷால் தெரிவித்தார்.

நடிகர்களிடம் இருந்து எவ்வாறு சிறப்பான நடிப்பை வெளிக்கொண்டு வருவது என்பதை இயக்குநர் பாலாவிடம் கற்றுக்கொண்டதாக கூறிய விஷால், துஷாரா, அஞ்சலி, ஜான் விஜய், மாயா, அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவின் அனைத்து நடிகர்களும் தனது இயக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

35 ஆண்டுகால கனவு

இயக்குநராக வேண்டும் என்பது தனது 35 ஆண்டுகால கனவு என்று குறிப்பிட்ட விஷால், அந்தக் கனவு உருவான பின்னணியையும் பகிர்ந்து கொண்டார்.

தான் இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த காலத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக சேர்வதற்காக தனது தந்தை நான்கு மணி நேரம் காத்திருந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த விஷால், தனது கனவை ஊக்கப்படுத்தி நிறைவேற்றிய தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல், தனது திரையுலகப் பயணத்தில் தாய் மற்றும் தந்தை இருவருமே மிக முக்கியமானவர்கள் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, ‘சண்டக்கோழி’ திரைப்படத்தில் தான் நடிப்பதற்கு தனது தாயே முக்கிய காரணமாக இருந்ததாகவும் விஷால் தெரிவித்தார்.

ஆர்.பி. சௌத்ரி அறிமுகப்படுத்திய 45-வது புதுமுக இயக்குநர் தான் என்றும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது படம் ‘மகுடம்’ என்றும் குறிப்பிட்ட விஷால், தனது குருநாதர் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கும் நன்றி தெரிவித்தார். அவரிடம் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக கூறினார்.

ராம்கோபால் வர்மா இயக்கிய ‘உதயம்’ திரைப்படத்தை பார்த்தபோது இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் தனக்குள் ஏற்பட்டதாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கனவு தற்போது நனவாகியிருப்பதாகவும் விஷால் தெரிவித்தார்.

“நமது கனவுகளில் நாம் நம்பிக்கையுடன் இருந்தால், நிச்சயம் ஒரு நாள் அது நிறைவேறும். அது சினிமாவுக்கு மட்டுமல்ல; எந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்” என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

‘மகுடம்’ குழுவினருக்கு விஷாலின் பாராட்டு

‘மகுடம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் தனக்கு நீண்ட காலமாக அறிமுகமானவர் என்றும், தனது ரசனையை நன்கு புரிந்துகொண்டு பணியாற்றியதாகவும் விஷால் கூறினார்.

இயக்குநர் சுந்தர்.சி அனைத்து சூழ்நிலைகளையும் மிகவும் எளிதாகக் கையாளக்கூடியவர் என்றும், அவரிடம் இருந்து தான் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பொன்.பார்த்திபன் தனக்கு ஏற்ற வகையில் வசனங்களை எழுதக்கூடிய சிறந்த வசனகர்த்தா என்றும் விஷால் பாராட்டினார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசிய விஷால், புதுமுக இயக்குநர்களுக்கு அவர் ஒரு வரம் போன்றவர் என்று குறிப்பிட்டார். ‘மகுடம்’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷின் இசை உயிர் கொடுத்துள்ளதாகவும், அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பாடலாசிரியர்கள் உமாதேவி, ஏகாதசி, விவேக், கருணா ஆகியோருக்கும், திலீப்பின் பங்களிப்புக்கும் விஷால் நன்றி தெரிவித்தார்.

“கடைசி 8 நிமிடங்கள் மேஜிக் செய்யும்!”

‘மகுடம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இதுவரை வேறு எந்தப் படத்திலும் வந்திராத வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்ட விஷால், குறிப்பாக படத்தின் கடைசி எட்டு நிமிடங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நடிகர் ஜான் விஜய்யுடனான தனது நீண்டகால நட்பையும் விஷால் நினைவுகூர்ந்தார். கல்லூரி காலத்திலிருந்தே அவரை நன்கு தெரியும் என்றும், அவரது இயல்பான உடல்மொழி மற்றும் மேனரிசங்களை ‘மகுடம்’ படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இசைஞானி இளையராஜாவுக்கும் நன்றி தெரிவித்த விஷால், அவரது இசையை திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

விஜய் குறித்து விஷாலின் சுவாரஸ்யமான பதிவு

தனக்குப் பிடித்த நடிகர் விஜய் என்றும், அவர் தற்போது தமிழக முதல்வராக இருப்பதாகவும் குறிப்பிட்ட விஷால், விஜய்யின் திரைப்படங்களை எந்த ரோஹிணி திரையரங்கில் அமர்ந்து ரசிப்பாரோ, அதே திரையரங்கில் தனது ‘மகுடம்’ திரைப்படத்தையும் பார்க்கப் போவதாக தெரிவித்தார்.

திரைப்படம் வெளியாகும் முன்பாக சில சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றைத் தாண்டி ‘மகுடம்’ திட்டமிட்டபடி திரையரங்குகளை வந்தடையும் என்றும் விஷால் தெரிவித்தார்.

வரும் 14ஆம் தேதி ‘மகுடம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், 16ஆம் தேதி நடைபெற உள்ள வெற்றிவிழாவில் மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன் என்றும் அவர் கூறினார்.

“படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்ற வேண்டுகோளுடன் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார் விஷால்.

நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது நீண்ட நாள் கனவை நனவாக்கும் இயக்குநராக களமிறங்கியுள்ள விஷாலின் ‘மகுடம்’, அவரது புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும், கடைசி எட்டு நிமிடங்கள் குறித்த அவரது எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான ஆவலை மேலும் அதிகரித்துள்ளன.

“My 35-Year-Long Dream Has Finally Come True Through ‘Magudam’,” Says Vishal

Actor Vishal turns director with ‘Magudam’, speaks emotionally about his long journey, the challenges of filmmaking and the people who stood by him

Actor Vishal, who has carved a niche for himself as one of Tamil cinema’s popular stars, is now embarking on a new journey as a director with his upcoming film ‘Magudam’. The film, which also features Vishal in the lead role, is gearing up for a theatrical release on August 14.

Speaking at an event organised ahead of the film’s release, Vishal opened up about his 35-year-long dream of becoming a director, the challenges he faced while making the film and the people who supported him throughout his journey.

Vishal began by expressing his gratitude to producer R.B. Choudary for giving him the opportunity to make the film and for placing his trust in him.

He also expressed his heartfelt gratitude to his future wife, Sai Dhanshika, who stood by him during a difficult phase when he had not acted in a film for nearly 14 months.

Vishal also thanked Tiruppur Subramaniam for the encouragement and confidence he had placed in him. He said that the platform provided by him had played an important role in shaping Magudam and that he had worked extremely hard to ensure that the trust placed in him did not go in vain.

A Challenging Journey Behind the Camera

Speaking about his experience as a filmmaker, Vishal described Magudam as one of the most challenging projects of his career.

While he had to perform in front of the camera as an actor, he also had several responsibilities behind the camera as a director. Vishal revealed that he experimented with the way certain scenes were performed, including asking actors to begin performing a few seconds after he called for the action, as it would help him during the editing process.

He further appreciated the entire cast and crew for allowing him the freedom to contribute across different departments.

Vishal said that nobody on the team questioned why he was giving inputs regarding performances, music or stunt sequences. According to him, the absence of ego within the team was one of the key reasons why Magudam shaped up so well.

He credited director Bala for teaching him how to bring out the best performances from actors. Vishal particularly thanked actors including Dushara, Anjali, John Vijay, Maya and Ashwin for understanding his vision and performing according to his direction.

“Be Confident About Your Dreams”

Vishal revealed that becoming a director had been his dream for the past 35 years.

Recalling the early days of his career, he spoke about how his father waited for nearly four hours when Vishal wanted to join actor-director Arjun as an assistant director.

Vishal expressed his gratitude to his father for encouraging him and helping him stay committed to his dream.

He also recalled that his mother played a crucial role in his entry into acting, particularly in making sure that he got the opportunity to act in Sandakozhi.

Vishal stated that both his parents have played extremely important roles in his career.

He further revealed that he is the 45th debutant director introduced by R.B. Choudary and that Magudam is the 99th production from Super Good Films.

Vishal also thanked his mentor, Action King Arjun, saying that Arjun was the person who gave him an opportunity to act and that he learned a great deal about filmmaking from him.

He recalled watching Ram Gopal Varma’s Udayam and developing the desire to become a filmmaker.

“Today, that dream has finally become a reality. If we remain confident about our dreams, they will certainly come true. This applies not just to cinema but to every field,” Vishal said.

Vishal Praises the ‘Magudam’ Team

Vishal had words of appreciation for his technical team as well.

He said cinematographer Richard had been known to him for many years and understood his visual preferences and creative sensibilities.

He also praised director Sundar C, saying that he has the ability to handle every situation with ease and that Vishal had learned several valuable lessons from him.

Vishal described writer Pon. Parthiban as someone who understands his style and can write dialogues that suit him perfectly.

He had special words of appreciation for music composer G.V. Prakash Kumar, calling him a blessing for debutant filmmakers.

Vishal said G.V. Prakash had given life to Magudam through his music and expressed his gratitude to the composer for his contribution to the film.

He also thanked lyricists Umadevi, Ekadasi, Vivek and Karuna, along with Dileep, for their contributions to the project.

“The Last Eight Minutes Will Create Magic”

Vishal expressed confidence in the film’s climax, claiming that the climax sequence in Magudam would be unlike anything audiences had seen in other films.

He particularly highlighted the final eight minutes of the film, saying that they would create a magical experience for audiences.

Vishal also spoke about his association with actor John Vijay. Recalling that he had known John Vijay since his college days, he said that the actor’s natural mannerisms had been incorporated into his character in Magudam.

He also thanked music maestro Ilaiyaraaja for allowing his music to be used in the film.

Vishal’s Special Mention of Vijay

Vishal also made a special mention of actor Vijay, whom he described as his favourite actor.

He said that he had enjoyed watching Vijay’s films at Rohini Theatre and revealed that he intends to watch Magudam at the same theatre.

Vishal acknowledged that the film is currently facing a few challenges but expressed confidence that the team would overcome them and ensure that the movie reaches theatres as planned.

Magudam is scheduled to release worldwide on August 14. Vishal also said that he would meet the media and fans again at the film’s success celebration on August 16, where he would reveal more details about the project.

Concluding his speech, Vishal thanked the media and requested audiences to watch Magudam in theatres and share their honest opinions.

With Magudam, Vishal is not merely stepping behind the camera but also fulfilling a dream that he has carried for 35 years. The film marks a significant new chapter in his journey as he takes on the dual responsibility of actor and director.