Thursday, March 12
Shadow

ரசிகர்களுடன் இணைந்த “மை லார்ட்” படக்குழு – அன்பும் மனிதநேயமும் பேசும் திரைப்படம் என படக்குழு நம்பிக்கை

ரசிகர்களுடன் இணைந்த “மை லார்ட்” படக்குழு – அன்பும் மனிதநேயமும் பேசும் திரைப்படம் என படக்குழு நம்பிக்கை.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் முன்னெடுத்துள்ள “மை லார்ட்” திரைப்படம், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் சமூக உணர்வுகள் மற்றும் குடும்ப உறவுகளைக் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது. நடிகர் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த சந்திப்பு விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய படக்குழுவினர், திரைப்பட அனுபவங்களை பகிர்ந்ததுடன், பாடல்கள் பாடியும் வசனங்களைப் பேசியும் ரசிகர்களை மகிழ்வித்தனர்.


மை லார்ட்” – முழுமையான திரையரங்க அனுபவம்: ஷான் ரோல்டன்
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, “மை லார்ட் திரைப்படம் பார்வையாளர்களுக்கு முழுமையான திருப்தியை அளிக்கும் படமாக இருக்கும்” என்றார். உணவில் சுவை மட்டுமல்ல, ஆரோக்கியமும் முக்கியம் என்பதுபோல், இந்த படம் மக்களை மகிழ்விப்பதுடன் மனித வாழ்க்கையின் உண்மைகளையும் நினைவூட்டும் என அவர் குறிப்பிட்டார். சசிகுமாருக்கும் இயக்குநர் ராஜுமுருகனுக்கும் இந்த திரைப்படம் ஒரு முக்கிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
காதலும் மனிதநேயமும் இணையும் கதை: இயக்குநர் ராஜுமுருகன்.

இயக்குநர் ராஜுமுருகன் தனது உரையில், திரைப்படம் வேலண்டைன்ஸ் டே காலகட்டத்தில் வெளியாகுவது திட்டமிட்ட ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார். கணவன்–மனைவிக்கிடையிலான உறவின் ஆழமான காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், காதல் என்பது ஒரு உறவிற்குள் மட்டுமல்ல, மனிதர்களிடையே பரவும் ஒரு உணர்வு என்பதை எடுத்துரைக்கும் என அவர் கூறினார்.

மேலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு சசிகுமார் மிகவும் பொருத்தமானவர் என்றும், அவரது தனிப்பட்ட மனிதநேய குணாதிசயங்களே அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை சைத்ரா இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார் என்றும், அவரின் நடிப்பு ரசிகர்களை கவரும் எனவும் கூறினார்.


மறக்க முடியாத அனுபவம்: நடிகை சைத்ரா

நடிகை சைத்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது பெரும் மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை ரசிகர்களை கவரும் என்றும், காதல் மற்றும் அரசியல் பின்னணியுடன் கூடிய கதை பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்றும் கூறினார். தமிழில் தொடர்ந்து சிறப்பான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இருப்பதையும் அவர் பகிர்ந்தார்.

குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படம்: நடிகர் சசிகுமார்
நடிகர் சசிகுமார், தனது திரைப்படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன என்று கூறினார். “மை லார்ட்” திரைப்படம் அன்பு, பொறுமை மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் கதையாக இருக்கும் என்றும், இளம் தலைமுறையினருக்கும் சிந்திக்க வைக்கும் செய்தியை கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதையும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.

சமூக நையாண்டியுடன் குடும்ப பொழுதுபோக்கு
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சவால்களை சமூக நையாண்டி பாணியில் வெளிப்படுத்துவதோடு, குடும்ப உறவுகளின் மதிப்பையும் பேசும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ள நிலையில், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கம் முனி பால்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார்.

வெளியீட்டு தேதி
அன்பு, குடும்ப உறவுகள் மற்றும் சமூக உணர்வுகளை இணைக்கும் “மை லார்ட்” திரைப்படம், வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

My Lord” Team Meets Fans – Makers Confident About a Film That Speaks Love and Humanity

Produced by Jayanthi Ambedkumar under the banner of Olympia Movies and directed by Raju Murugan, the upcoming film “My Lord”, starring Sasikumar in a powerful lead role, is all set for a worldwide theatrical release on February 13.
Ahead of the film’s release, the cast and crew met fans at a grand interactive event attended by thousands. During the event, the team interacted with fans, answered their questions, sang songs, delivered dialogues from the film, and shared interesting details about the making of the movie.

My Lord” Will Offer a Complete Theatrical Experience – Sean Roldan

Speaking at the event, music composer Sean Roldan said that My Lord will give audiences a sense of complete satisfaction. He compared the film to a fulfilling meal that not only tastes good but also provides emotional nourishment. He expressed confidence that the film will entertain audiences while also reminding them of important human values. He also wished for the film to become a major success for both Sasikumar and director Raju Murugan.
A Story That Blends Love and Humanity –

Director Raju Murugan
Director Raju Murugan explained that the film’s release during the Valentine’s Day season is intentional and meaningful. He said the story revolves around the deep love shared between a husband and wife, emphasizing that such love is one of the purest forms of affection.
He further added that love is not limited to relationships between individuals but extends to compassion toward fellow human beings.

He praised Sasikumar, stating that the actor’s real-life personality and humane nature made him the perfect choice for the role. The director also introduced actress Chaithra, who hails from Karnataka, and expressed confidence that her performance will impress Tamil audiences.


A Memorable Experience – Actress Chaithra
Actress Chaithra shared that working alongside some of Indian cinema’s most respected personalities was a wonderful experience. She said she learned a lot while working on the film and expressed confidence that the music and songs composed by Sean Roldan will appeal to audiences. She also mentioned that the film blends romance with political drama and promises good value for audiences. She expressed her desire to continue working in Tamil cinema.

A Family Entertainer With a Message – Actor Sasikumar
Actor Sasikumar stated that, like his earlier films, My Lord will highlight love, patience, and humanity. He emphasized that his films are always family-friendly and suitable for audiences of all age groups. He said the film carries an important message for the younger generation, encouraging them to practice patience and compassion.
He also appreciated actor Guru Somasundaram for his important role in the film and expressed happiness about collaborating again with music composer Sean Roldan.