தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 27ந் தேதி சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், ஒப்புதல் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து இறுதி வடிவம் கொடுக்க இன்று சங்கத்தின் செயற்குழு கூடுடியது. சென்னை, திநகரில் உள்ள நடிகர் சங்கத்தில் நடைபெற்று வருகிறது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளார் கார்த்தி முன்னிலை வகிக்கிறார்கள் துணை தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர்களும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சங்க கட்டிட பணிகளை துரிதப்படுத்துதல், நட்சத்திர கிரிக்கெட் மீதான ஊழல் புகார்களுக்கு பதில் அளித்தல், சங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 20 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்,தாம்பரத்தை அடுத்துள்ள வெங்கடாபுரத்தில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26சென்ட் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் கிரிமினல் புகார் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றம்,
லயேலா கல்லூரியில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என லயேலா கல்லூரிக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பிய நடிகர் சங்க உறுப்பினரும், ராதாரவியின் உறவினருமான பிரபாகரன் மீது சங்கத்தின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட ஐந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட சரத்குமார், ராதாரவி மீது மேல் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி பேசி, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கிற தீர்மானங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.