Wednesday, January 20
Shadow

நாடோடிகள் 2 திரை விமர்சனம் ( உணர்வும் உணர்ச்சியும்) Rank 4/5

சமூக சேவகர் ஜீவா (சசிகுமார்), தனக்கு திருமணம் நடந்த முதல் நாள் இரவில், தான் திருமணம் செய்ய உள்ள பெண், கட்டாயத்தின் பேரில் தன்னை திருமணத்திற்கு ஒப்பு கொண்டுள்ளதை தெரிந்து கொள்கிறார். இதையடுத்து அந்த பெண்ணை அவளது காதலியிடம் சேர்க்க முயற்சிகிறார் சமூக சேவகர். ஆனால் பெண்ணின் குடும்பம், அவர்களை கவுரவ கொலை செய்ய முயற்சிகிறது. இதையறிந்த சமூக சேவகர் அந்த பெண்னையும், அவளது காதலனையும் காப்பற்றினாரா என்பதே படத்தின் கதை.

ஒருவரியில் சொன்னால் தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கௌசல்யா-ஷங்கர் ஆகியோரின் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம்.

சமுதாயத்தில் தவறாக இருக்கும் சில விஷயங்கள், குறிப்பாக ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகுமார். அவரது கூட்டத்தில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் அஞ்சலி.

தினமும் வீதியில் போராட்டம், வாங்கும் சம்பளத்தை கூட வீட்டில் கொடுப்பதில்லை சமூகத்திற்காக நல்ல விஷயங்கள் செய்ய செலவு செய்து விடுகிறார் என சசிக்குமார் பொதுநலத்துடன் செய்யும் விஷயங்கள் பார்த்து அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. அவரது சொந்த மாமா கூட இவருக்கு பெண் தர முன்வராத நிலையில் ஒருநாள் இவருக்கு பெண் தருவதாக சவுமியாவின் (அதுல்யா) பெற்றோர் கூறுகின்றனர்.

அனைவர் முன்னிலையில் திருமணமும் நடந்து முடிகிறது. அதன் பிறகு அன்று இரவு தான் சசிகுமாருக்கு காத்திருக்கிறது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுல்யா யார் என்பதும் அவருக்கு ஜாதி வெறி பிடித்த குடும்பத்தினரால் நடந்த விஷயங்கள் பற்றி தெரிய வருகிறது.

அப்போது சசிகுமார் ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். அதனால் வரும் பிரச்சனைகள் மற்றும் ஜாதி வெறி பிடித்தவர்களால் வரும் சிக்கல்களை அவர் எப்படி சமாளித்தார் என்பது தான் மீதி படம்.

“நாளைக்கே மாற்றம் வரணும்னு அவசியம் இல்லை, அடுத்த தலைமுறையாகவது மாறட்டும்” என ஜாதிக்கு எதிராக கருத்து கூறி முதல்படியை எடுத்துவைத்துள்ளது இந்த படம்.

சசிக்குமார் தனது பாணியில் அதே வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். அஞ்சலி, அதுல்யா ஆகியோரின் நடிப்பு கச்சிதம். மிக எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருந்த பரணியின் ரோலுக்காக சமுத்திரக்கனியை பாராட்டலாம். ஒரு சராசரி மனிதன் எப்படி எல்லாம் யோசிப்பான் என்பதை திரையில் அப்படியே கொண்டுவந்திருந்தது அவரது ரோல்.

மாமா ரோலில் நடித்த ஞானசம்பந்தம், அதே காமெடியான வேடத்தில் நமோ நாராயணன், அம்மாவாக நடிகை துளசி, சில காட்சிகளில் மட்டுமே வரும் சமுத்திரக்கனி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாகவே இருந்தது.

படத்தின் பிளஸ்: சமுத்திர கனியின் திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை.

படத்தின் மைனஸ்: மெதுவாக நகரும் காட்சிகள்

மொத்தத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாகவே இருக்கிறது. சமுத்திரகனி+சசிகுமார் கூட்டணிக்கு மீண்டும் ஒரு வெற்றி என்றே கூறலாம்.

CLOSE
CLOSE