
‘தி பாரடைஸ்’ டீசரில் அதிரடியின் உச்சம்… நானியின் மிரட்டல் அவதாரம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது! செப்டம்பர் 24-ல் திரையரங்குகளை அதிர வைக்கும் பிரம்மாண்ட படைப்பு
சென்னை:
ஒரு திரைப்படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்குவது எளிதான விஷயமல்ல. ஆனால் ஒவ்வொரு விளம்பர வெளியீட்டின் மூலமும் அந்த எதிர்பார்ப்பை படிப்படியாக உயர்த்தி, தற்போது ரசிகர்களின் கவனத்தை முழுமையாக தனது பக்கம் திருப்பியிருக்கும் படம் தான் ‘தி பாரடைஸ்’. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதாநாயகனாக நடித்துள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
“நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது… நெருப்பில் ஒரு புதிய ஆட்சி தொடங்குகிறது” என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த டீசர், வழக்கமான மாஸ் காட்சிகளை மட்டுமே நம்பாமல், உணர்வுகள், அடக்குமுறை, புரட்சி மற்றும் பழிவாங்கும் போராட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு தீவிரமான உலகத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
டீசரில் நானி ஏற்றுள்ள ‘ஜடல்’ என்ற கதாபாத்திரம் சாதாரண நாயகனாக இல்லாமல், பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், அதிகாரத்தின் அச்சுறுத்தலாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கும் தோற்ற மாற்றமும், தீவிரமான உடல் மொழியும், வசன உச்சரிப்பும், ஒவ்வொரு காட்சியிலும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. நானியின் திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை டீசர் ஏற்படுத்துகிறது.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, தனது காட்சிப்படுத்தும் பாணியின் மூலம் திரைப்படத்திற்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். வசனங்களை விட காட்சிகளின் வழியாக கதையை சொல்லும் முயற்சி டீசர் முழுவதும் தென்படுகிறது. குறிப்பாக மீண்டும் மீண்டும் தோன்றும் காகத்தின் குறியீடு, சமூகத்தின் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் அடையாளமாக பயன்படுத்தப்பட்டிருப்பது டீசருக்கு கூடுதல் ஆழத்தை வழங்குகிறது.
அதிரடி காட்சிகளும் இந்த டீசரின் முக்கிய பலமாக அமைந்துள்ளன. கோடாரி மோதல்கள், சிறைச்சாலை சண்டைகள், வாள் சண்டைகள், கைகலப்புகள், வெடிப்பு காட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கிளர்ச்சி காட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரம்மாண்டம் மட்டுமல்ல, கதையின் தீவிரமும் வெளிப்படுகிறது.
தொழில்நுட்ப அம்சங்களிலும் படம் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா உருவாக்கியிருக்கும் உலகம் யதார்த்தமும், அச்சமும் கலந்த சூழலை உருவாக்குகிறது. ஒளிப்பதிவாளர் சி.ஹெச். சாய், அந்த உலகத்தை வித்தியாசமான காட்சியமைப்புகளால் உயிர்ப்பித்துள்ளார்.
இந்த டீசரின் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை. ஆரம்பத்தில் மர்ம உணர்வை ஏற்படுத்தும் இசை, பின்னர் அதிரடி மற்றும் உணர்ச்சிகளை ஒன்றாக இணைத்து டீசரின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்துகிறது.
நானியுடன் மோகன் பாபு, கயாடு லோஹர், ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி, SLV Cinemas நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் மற்றும் ‘ஆயா ஷேர்’ பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘தி பாரடைஸ்’, தற்போது டீசர் வெளியீட்டின் மூலம் அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. உலகம் முழுவதும் செப்டம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷன் அனுபவங்களில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை டீசர் உறுதிப்படுத்தியுள்ளது.

Nani’s ‘The Paradise’ Teaser Unleashes a Brutal World of Rebellion; Grand Cinematic Spectacle Set for September 24 Release
Natural Star Nani has once again captured the spotlight with the explosive teaser of his much-awaited pan-world action drama The Paradise. Ever since its first announcement, the film has steadily built enormous anticipation through its striking first-look poster, impactful glimpses, and the chartbuster anthem Aaya Sher. With the teaser now unveiled, the makers have taken the excitement surrounding the film to an entirely new level.
Opening with the powerful message, “Hell Breaks Loose, A New Reign Begins In Fire,” the teaser introduces audiences to a dark and unforgiving world shaped by oppression, violence, and resistance. Rather than relying solely on action, the film promises an emotionally driven narrative where revolution and survival become the defining forces.
At the heart of the story is Jadal, portrayed by Nani in what appears to be one of the most transformative performances of his career. Emerging as the voice of the oppressed and the greatest threat to those in power, Jadal is presented as a fearless revolutionary who challenges an unjust system. Nani is almost unrecognizable in his rugged new look, delivering an intense screen presence through his commanding body language, powerful dialogue delivery, and emotionally charged performance.
Director Srikanth Odela once again showcases his distinctive filmmaking style by blending powerful visual storytelling with raw emotion. One of the teaser’s most striking elements is the recurring image of a crow, which symbolically represents generations of marginalized people. This layered symbolism adds emotional depth while complementing the film’s larger narrative of rebellion and resistance.
The action sequences are mounted on a spectacular scale. Savage axe battles, brutal prison fights, sword combat, bone-crunching hand-to-hand confrontations, massive explosions, and large-scale rebellion sequences featuring thousands of people create an immersive cinematic experience. Every frame reflects the film’s ambitious vision and uncompromising scale.
The technical team also plays a significant role in elevating the teaser. Production designer Avinash Kolla crafts a hauntingly realistic world, while cinematographer CH Sai captures it through gritty visuals and striking compositions that enhance the film’s atmosphere.
Adding tremendous impact is Anirudh Ravichander’s electrifying background score. Beginning with an eerie musical tone before building into an explosive orchestral crescendo, the score amplifies every emotional and action-packed moment, making the teaser even more gripping.
The film also features Mohan Babu, Kayadu Lohar, Raghav Juyal, Sonali Kulkarni, and Sampoornesh Babu in pivotal roles. Produced by Sudhakar Cherukuri under the SLV Cinemas banner, The Paradise is being mounted as one of the biggest cinematic ventures in Nani’s career.
Having already impressed audiences with its promotional campaign, The Paradise has now further heightened expectations through its powerful teaser. With its compelling visuals, intense performances, and large-scale storytelling, the film is shaping up to be one of the year’s most anticipated theatrical releases.
The Paradise is scheduled for a worldwide theatrical release on September 24, promising audiences an epic big-screen experience unlike any other.
