Tuesday, November 17
Shadow

நயன்தாரா – கவின் கூட்டணியில் உருவான ‘Hi’… செப்டம்பர் 25 முதல் ZEE5-ல் காதல் பயணம்!

நயன்தாரா – கவின் கூட்டணியில் உருவான ‘Hi’… செப்டம்பர் 25 முதல் ZEE5-ல் காதல் பயணம்!

நவீன தலைமுறையின் காதல், உறவுகள், எதிர்பார்ப்புகள், நிராகரிப்புகள் என இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘Hi’. நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள இப்படம், செப்டம்பர் 25, 2026 முதல் தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாக வெளியாகிறது.

வழக்கமான காதல் கதைகளிலிருந்து வித்தியாசமாக, இன்றைய காலகட்டத்தில் காதல் மற்றும் உறவுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படமாக ‘Hi’ உருவாகியுள்ளது.

காதலின் மறுபக்கத்தை பேசும் கதை

விஷ்ணு எடவன் இயக்கியுள்ள ‘Hi’ திரைப்படத்தில், காதலில் ஏற்பட்ட ஏமாற்றங்களையும் நிராகரிப்புகளையும் கடந்து மீண்டும் காதலைத் தேடும் இளைஞனாக கவின் நடித்துள்ளார். மறுபுறம், குடும்ப சூழ்நிலைகளால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் இளம் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார்.

எதிர்பாராத சூழலில் இருவரும் சந்திக்கும் போது, அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், காதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சுய புரிதலை நோக்கிய பயணமுமே படத்தின் மையக்கருவாக அமைகிறது.

நயன்தாரா, தன்னம்பிக்கை கொண்ட சுயாதீனமான பெண்ணாகவும், தனது முடிவுகளில் உறுதியாக இருப்பவராகவும் கதாபாத்திரத்தை கையாண்டுள்ளார். அதேநேரம், அவரது கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த உணர்வுகள் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களும் கதையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

கவின், தனது உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் இளைஞனாக நடித்துள்ளார். காதல், நிராகரிப்பு, தன்னம்பிக்கையின்மை உள்ளிட்ட உணர்வுகளை எதிர்கொள்ளும் அவரது கதாபாத்திரம், இன்றைய இளம் தலைமுறையினருடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களும் இணைவு

நயன்தாரா மற்றும் கவினுடன், ராதிகா சரத்குமார், பிரபு உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் கே. பாக்யராஜ் நடித்துள்ள திரைப்படங்களில் ஒன்றாகவும் ‘Hi’ அமைந்துள்ளது.

இவர்களின் பங்களிப்பு படத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இசையும் படத்தின் முக்கிய பலம்

ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள ‘Hi’ திரைப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக ‘ரசகுல்லா’ பாடல் ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை சரியான அளவில் கலந்து, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ZEE5-ல் பிரத்யேக வெளியீடு

திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு தற்போது ‘Hi’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் ரசிகர்களை சந்திக்கிறது. செப்டம்பர் 25, 2026 முதல் தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாக ‘Hi’ திரைப்படத்தை காணலாம்.

இன்றைய தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை அவர்களுக்கு நெருக்கமான மொழியில் சொல்லும் இப்படம், ZEE5-ல் வெளியாகும் புதிய தமிழ் திரைப்பட வரிசையில் இணைகிறது.

Nayanthara and Kavin’s ‘Hi’ to Take Audiences on a Modern Love Journey; Premieres on ZEE5 from September 25

A contemporary love story that explores relationships, expectations, heartbreak, rejection and the emotional complexities faced by today’s generation, ‘Hi’ stars Nayanthara and Kavin in the lead roles. Directed by Vishnu Edavan, the film is set to premiere exclusively on Tamil ZEE5 from September 25, 2026.

Unlike conventional romantic dramas, ‘Hi’ takes a fresh look at how love and relationships are evolving in today’s world. The film explores the emotional journeys of two individuals who come together unexpectedly and gradually discover love, acceptance and a better understanding of themselves.

A Story That Explores the Other Side of Love

Directed by Vishnu Edavan, ‘Hi’ follows a young man played by Kavin who continues to search for love despite experiencing heartbreak and rejection. Nayanthara plays a young woman dealing with personal and family challenges while trying to navigate difficult circumstances in her life.

When their paths cross unexpectedly, their lives begin to change. The story follows their journey as they confront their fears, insecurities and differences while searching for acceptance, companionship and love.

Nayanthara portrays an independent and confident woman who stands firmly by her principles. At the same time, her character has her own emotional struggles and vulnerabilities, adding depth to the narrative.

Kavin plays a young man who is open about his feelings and does not hesitate to express what is in his heart. His character goes through love, rejection and self-doubt while continuing to hope for a meaningful relationship, making his journey relatable to today’s younger generation.

Veteran Actors Add More Depth

Alongside Nayanthara and Kavin, the film features veteran actors including Radhika Sarathkumar and Prabhu in important roles. The late actor, director and writer K. Bhagyaraj also appears in the film, making ‘Hi’ one of his notable final screen appearances.

The presence of these experienced performers adds emotional depth and weight to the narrative.

Music That Complements the Story

Music for ‘Hi’ has been composed by Jen Martin, with the songs and background score complementing the emotions of the story. The song ‘Rasagulla’ has already caught the attention of audiences with its energetic music and catchy tune.

The film blends romance, humour and emotions while exploring the changing dynamics of modern relationships, making it a story aimed at audiences across age groups.

‘Hi’ to Stream Exclusively on ZEE5

Following its theatrical run, ‘Hi’ is now set to make its digital premiere. The film will stream exclusively on Tamil ZEE5 from September 25, 2026.

With its focus on contemporary love, relationships and the emotional challenges faced by the younger generation, ‘Hi’ is set to bring a fresh romantic experience to audiences on ZEE5.