நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரத்தை தேர்வு செய்வதிலும், அதிக சம்பளம் பெறுவதிலும், நடிகையர் நயன்தாரா, த்ரிஷா இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
காதல் கசந்த பின், மீண்டும் சினிமாவுக்கு வந்தவர்கள் நடிகையர் நயன்தாரா மற்றும் த்ரிஷா. டூயட் பாடலுக்கு ஆடும் நாயகியாக மட்டுமின்றி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை, தேர்வு செய்து நடிக்கின்றனர்.
நயன்தாரா, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என, தொடர்ந்து, ஹிட் படங்களை கொடுத்து, சம்பளத்தை, இரண்டு கோடி ரூபாய் வரை உயர்த்தி உள்ளார்.
த்ரிஷாவும், என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, நாயகி, மோகினி படங்களில் நடித்து வருகிறார். இளவரசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க, கமிட் ஆகி உள்ளார். ஐந்து வேடங்களில் நடிக்கும், த்ரிஷாவுக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளது.
கதையை தேர்வு செய்தல், அதிக சம்பளம் பெறுவது ஆகியவற்றில், நயன்தாரா – த்ரிஷா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.