
தென்னகத்து சூப்பர்ஸ்டார் லேடி நயன்தாரா சமீபகாலமாக காதல் பாடல் மரத்தை சுற்றி ஆட்டம் குத்தாட்டம் இவைகளுக்கு குட் பை சொன்ன நயன்தாரா அது மட்டும் இல்லாமல் எனக்கு முக்குயத்துவம் இல்லாத எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன் இப்ப ஒருவருக்காக தன் கொள்கையை தளர்த்தி உள்ளார்.
பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வரும் நயன்தாரா புதிய படம் ஒன்றில் விஷால் ஜோடியாக நடிக்கிறாராம்.
நயன்தாரா தற்போது இமைக்கா நொடிகள், அறம் மற்றும் கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.
பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார் நயன். பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் மரத்தை சுற்றி பாட்டு பாடுவதோடு தனக்கு வேலை இருக்காது என்று நினைக்கிறார் நயன்தாரா.
இந்நிலையில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகுமாரை வைத்து பிரம்மன் படத்தை எடுத்த சாக்ரடீஸ் விஷாலை இயக்கும் படத்தில் தான் நயன்தாரா நடிக்கிறாராம்.சாக்ரடீ்ஸ் விக்ரமை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. அந்த திட்டம் கைவிடப்பட்டதால் அவர் தற்போது விஷாலை இயக்குகிறார்.