கொஞ்சம் கொஞ்சம் திரைப்படத்தின் இயக்குனர் உதய் சங்கரன் கூறும்போது,இப்படத்தில் அக்கா,தம்பி உறவுகளும்,கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கிற பிரச்சனைகளும்,இறுதியில் அவனுக்கு கிடைக்கின்ற தீர்வும் தான் கதை கரு.
அக்கா திலகவதியாக பிரியா மோஹன்,தம்பி திருநாவுக்கரசாக கோகுல் இருவரும் அறிமுகம் ஆகிறார்கள்.
திலகவதி போல இருக்க வேண்டும் என்று திருநாவுக்கரசை நிறைய மாதங்கள் தேடி,கடைசியாக நண்பரின் மூலமாக கோவையில் உள்ள கோகுல் அறிமுகமானார்.
கோகுலை சேர்ந்தவர்கள் யாரும் சினிமா துறையில் இல்லை.
கோகுல் இப்படத்திற்காக நடிப்பு,நடனம் கற்று கொண்டார்.
கோகுல், பிரியாவை பார்க்கும் போது அவர்கள் நிஜமாகவே ஒரு அம்மாவின் குழந்தைகளை போல இருக்கிறார்கள் என படக்குழுவினர்கள் பாராட்டினார்கள்.
கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் ஆற்றலை நான் என் குருநாதர் தேசிய விருது பெற்ற லோகிதாஸ் அவர்களிடம் கற்றுக்கொண்டேன்.
இரண்டு அறிமுக நாயகர்களின் நடிப்பினை பார்க்கும் போது ஏற்கனவே பல படங்களில் நடித்தது போல் அவர்கள் நடித்துள்ளனர்.
இவர்களுடன் பிரபல நடிகர்கள் அப்புகுட்டி,மன்சூர் அலிகான்,மதுமிதா,சிவதானு ஆகியோரும் நடித்து உள்ளனர்.
கோகுலுக்கு அம்மாவாக மகாலட்சுமி நடித்துள்ளார்.
பிரபல நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து,குடும்பமாக பார்த்து கொண்டார்கள்.இப்படத்தின் காட்சி அமைப்புகள் தமிழக கேரள எல்லையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைவரையும் இயக்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது …….