Saturday, February 15
Shadow

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார்.

நயன்தாராவிற்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை டிமான்ட்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply