நிறங்கள் மூன்று திரை விமர்சனம்
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நிறங்கள் மூன்று. மூன்றுவிதமான கதாபாத்திரங்களை இறுதியில் இணைத்து ஹைபர் லிங்க் முறையில் கதை சொல்லியுள்ளார். படத்தின் கதைப்படி, 12ம் வகுப்பு படித்து வரும் துஷ்யந்த் அவரது ஆசிரியர் மகளான அம்மு அபிராமியை காதலிக்கிறார். ஒருநாள் அதிகாலையில் ட்யூசன் சென்ற அம்மு அபிராமி காணாமல் போகிறார். துஷ்யந்த் தனது நண்பர்களுடன் ஒரு பக்கம் தேட ரகுமானும் தேடி வருகிறார். அதர்வா சினிமாவில் எப்படியாவது ஒரு படம் இயக்க வேண்டும் என்று தேடிக் கொண்டு இருக்க இவரது கதையை திருடி படம் எடுக்க முயல்கிறார். இதனை அதர்வா தனது நண்பர்கள் உடன் இணைந்து தடுக்க நினைக்கிறார். மறுபக்கம் லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டர் சரத்குமாருக்கும் அமைச்சரின் மகன்களுக்கும் இடையே மோதல் என ஒரு கதை போகிறது. துஷ்யந்த், ரகுமான், அதர்வா, சரத்குமாரின் தனித்தனி கதை இறுதியில் எப்படி ஒன்றாக இணைகிறது என்பதே இப்படத்தின் கதை.
மூன்று கதைகள் ஒரே புள்ளியில் இணையும் வகை கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்ல முயன்றுள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். துஷ்யந்த், அம்மு அபிராமி இருவரும் தங்களது வேலையை நன்றாக செய்துள்ளனர். ரகுமானின் கதாபாத்திரம் வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் எடை போட கூடாது என்பதற்காக உதாரணம். நன்றாகவும் நடித்துள்ளார். அதர்வா எந்நேரமும் போதை ஆசாமியாக வலம் வருகிறார். போதை போட்டால்தான் இயக்குனர்களுக்கு கதை வருமா என்ன? மற்றபடி சரத்குமார் தனது வழக்கமான நடிப்பால் கவர்கிறார். பாடல்கள் ஓகே. ஒளிப்பதிவு நன்று.
எதையோ சொல்ல வந்து எப்படியோ முடித்துள்ளனர். மொத்தத்தில் நிறங்கள் மூன்று – காட்சிப் பிழை ரேட்டிங் 2.5/5