Saturday, April 26
Shadow

அஜித் கோவத்துக்கு ஆளான வெங்கட் பிரபு

தானா வர்ற ஸ்ரீதேவியை தள்ளிக்கோ தள்ளிக்கோ என்றால் இதுதான் கதி போலும்! மங்காத்தா வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த சில வாரங்களிலேயே வெங்கட் பிரபுவை அழைத்த அஜீத், “மீண்டும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம். ஆக வேண்டிய வேலைய பாருங்க” என்று கூற, “கையில உங்களுக்கு ஏற்ற கதையே இல்லையே சார்” என்று கூறிவிட்டார் வெங்கட் பிரபு. அதற்கப்புறம் அவர் தமிழ்சினிமாவில் வேறு வேறு படங்களால் சிக்கி சீரழிந்தது தனிக்கதை. பனம்பழத்துக்கு எதுக்கு பவுடர் என்று நினைத்தவர், தனது ஆஸ்தான சிறுவர்களுடன் சென்னை 28 படத்தின் பார்ட் 2வை எடுக்க கிளம்பிவிட்டார்.

படம் நல்லா வந்திருக்கு… படம் நல்லா வந்திருக்கு… என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கூறி வந்தாலும், அந்த படத்தின் டீஸரையோ, ட்ரெய்லரையோ அஜீத்திடம் போட்டுக் காட்ட ஆன மட்டும் தண்ணி குடித்துவிட்டாராம். அப்புறம்… பிறகு… பார்க்கலாம் என்ற பதில்தான் வந்தது அவ்விடத்திலிருந்து. அஜீத்தும் வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு போய்விட்டார் அல்லவா? சுத்தம்.

இப்போது இழந்த பெருமையை மீட்கவும், மார்க்கெட்டில் நானும் இருக்கேன் என்று காட்டவும் மங்காத்தா 2 வை எடுக்க நினைக்கிறாராம். கதையை தயார் செய்துவிட்டாலும், அஜீத்தை சந்திப்பதுதான் ஐய்யோ குய்யோவாகிறது அவருக்கு. தற்போதைய தகவலின் படி, வெங்கட் பிரபுவுக்கு அஜீத்தின் காம்பவுண்ட் குளோஸ் என்ற நிலைமைதான்!

Leave a Reply