பிளஸ்-2 என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் சுஜாவருனி. ஆனால் பின்னர் அவர் குத்துப்பாட்டு நடிகையாகி விட்டார். அதோடு கவர்ச்சிகரமான வேடங்களிலும் நடித்து வந்தார்.
ஆனால் தற்போது கவர்ச்சியை ஓரங்கட்டி விட்டு கேரக்டர் நடிகையாக வலம்வரத் தொடங்கியிருக்கிறார் சுஜா. அந்த வகையில், சேட்டை படத்திற்கு பிறகு அப்புச்சி கிராமம், பென்சில் ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்தார் சுஜா.
அதைத் தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ், கிடாரி, காதல் தீவு, அமளிதுமளி உள்பட பல படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ள அவர், கிடாரி படத்தில் சிறிய வேடம் என்றாலும் பேசப்படும் வேடத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த படத்தை பார்க்கும்போது சுஜாவா இது என்ற ஆச்சர்யம் ரசிகர்களுக்கு ஏற்படும் என்று கூறும் சுஜா, இனிமேல் தொடர்ந்து சிறிய வேடங்கள் என்றாலும் கதைக்கு சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.
அந்த வகையில் தமிழ் சினிமாவே இவரை யாரும் எதிர் பார்க்காத வித்தியாசன நடிப்பில் பார்க்கலாம் என்று கிடாரி படத்தின் நடிகரும் தயாரிபாரும் ஆனா சசிகுமார் படத்தின் இயக்குனர் சொல்லுகிறார்கள் அதற்கு சாட்சியாக கிடாரி படத்தின் ட்ரைலர் மட்டுமே போதுமானது .
அதோடு கேரக்டர்களுக்காக என்னை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொண்டு நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்கிறார் சுஜாவருனி.