‘நானும் ரெளடி தான்’ படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனின் காதலில் விழுந்த நயன்தாரா சமீபகாலமாக திரைப்பட விழாக்களில் அவரோடு தான் காட்சியளிக்கிறார்.
இருவருமே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மீடியாக்கள் மட்டுமல்ல, திரையுலகினரே அவ்வப்போது சில சமிக்ஜைகளைக் கொடுத்தும் வருகிறார்கள்.
அதுபற்றி இருவருமே இதுவரை வெளிப்படையாக பேசாத நிலையில், நடந்திருக்கிற சம்பவத்தைப் பார்த்தால் இது காதலா? அல்லது வெறும் நட்பு தானா? என்கிற பெருங்குழப்பம் ரசிகர்கள் மத்தியில் தொடர்வது உறுதியாகியிருக்கிறது.
‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார். இதை சூர்யாவே சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். விக்னேஷ் சிவன் டைரக்ஷன் என்றதும் அதில் கண்டிப்பாக சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா தான் நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் சூர்யா படத்தில் நடிக்கவில்லை.
ஏன்?
இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் அமையாது என்று யோசித்த நயன் எங்களுக்குள் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை, வெறும் நட்பு மட்டும் தான் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தவே விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டாராம்.
அப்போ அம்புட்டுத்தானா விக்னேஷ் சிவனோட லவ்வூ…?