
நடிகர் கார்த்தி நடிப்பில் வருகின்ற தீபாவளிக்கு வரும் கஷ்மோரா படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான வரவேற்பை மிக உச்சத்திற்கு கொண்டு போய் உள்ளது
இதனிடையே படத்தின் நாயகன் அளித்த பேட்டியில் எனக்கும் நயன்தாராவுக்கும் ரோமன்ஸ் காட்சிகளே இல்லை என்றும் கதாநாயகி ஓடு காதல் காட்சி அவ்வளவா இல்லை என்றும் கூறி உள்ளார்
இந்த படத்தில் இன்றைய கோலிவுட்டின் முன்னணி நாயகிகளான நயன்தாரா, ராணி ரத்தினம்மா தேவி கேரக்டரிலும், ஸ்ரீதிவ்யா, ஆராய்ச்சியாளர் வேடத்திலும் நடித்துள்ளனர். ஆனால் கார்த்திக்கும் இந்த இரண்டு ஹீரோயின்களுக்கும் இடையே ரொமான்ஸ் காட்சிகளே இல்லையாம்.
இந்த படம் பிரமாண்டமான செட்களில் ஆக்சன், ஹாரர், காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், ரொமான்ஸ் இல்லாத குறையே தெரியாமல் படம் விறுவிறுப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது