Tuesday, October 6
Shadow

ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகும் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3

தமிழ் சினிமாவில் பேய் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெருமை நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரான்ஸ் தான் அந்த பெருமை சேரும் ஆம் முனி படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலமாக பேய் படங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது அதிலும் முக்கியமாக பல படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் அதுவும் தொடர்ந்து நான்கு பாகங்கள் எடுப்பது நம் ராகவா லாரான்ஸ் தான் அந்த பெருமையும் அவரை சாரும் இதற்க்கு முன் மூன்று பாகங்களை அவரே தயாரித்தார் தற்போது நான்காம் பாகத்தை சன் பிச்சர்சுடன் இணைந்து தயாரிக்கிறார்.

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது… இந்த படத்தில் மீண்டும் வேதிகா ராஜ்கிரண் இவர்களோடு ஓவியா இணைகிறார்கள்

சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19ம் தேதி உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளனர்…தேர்தல் முடிந்த மறு நாள் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத் தக்கது…