Thursday, April 18
Shadow

நுண்ணுணர்வு திரை விமர்சனம்

சக்தி ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி மதிவாணன் சக்திவேல் இயக்கி கதாநாயகனாகவும் நடிக்க,

இந்திரா , தினேஷ், திரி, ஸ்ரீபக், கீதாவாணன் உள்ளிட்டோர் நடிப்பில் வந்திருக்கும் படம் நுண்ணுணர்வு . இது நல்லுணர்வா ? பார்க்கலாம் .
சென்னையிலிருந்து ஆஸ்திரேலிய சென்று பல் மருத்துவராக பணியாற்றுபவன் சந்துரு (மதிவாணன் சக்திவேல்).
ஆஸ்திரேலியா வாழ் தமிழ்ப் பெண் சாரு (இந்திரா )

கண் காணாது இருப்போரின் செயல்பாடுகளை எந்த கருவியும் இன்றி , அச்சு அசலாய் உணரும் டெலிபதி என்ற ஞானம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறாள் இந்திரா
ஒரு நிலையில் அவளுக்கு டெலிபதி கை கூடுகிறது . இயல்பாகவோ அல்லது நிகழ்தகவாகவோ அவளுக்கு சந்துருவோடு டெலிபதித் தொடர்பு ஏற்படுகிறது .
அவனும் இவளை உணர்கிறான் .
ஆரம்பத்தில் இருவரும் ஹேண்ட்ஸ் ஃபிரீ செல்போனில் பேசிக் கொள்வது போல, டெலிபதி மூலம் பேசிக் கொள்கின்றனர் . ஒரு நிலையில் காட்சிகளும் தெரிய ஆரம்பிக்க வீடியோ கால் மூலம் பேசிக் கொள்கின்றனர் .

ஆர்வமுடன் படத்தை எடுத்து இருக்கிறார் மதிவாணன் . முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் .

அந்த இளம் வெயில் வெளிச்சமும் தூய்மையும் அதற்கேற்ப படத்தில் ஜொலிக்கும் எக்ஸ்போஷரும் அருமை .
கதையின் அடிப்படைக் கரு வித்தியாசமானது . சிறப்பானது . ஆனால் திரைக்கதையிலும் எடுத்த வகையிலும் போதாமை. இந்த டெலிபதியை பற்றி இன்னும் சொல்லி இருக்கலாம் நம்மக்கு தெரியாத விஷயம் சொன்னால் தெரிந்து கொள்வோம் தானே தேவை இல்லாத காட்சிகள் இல்லாமல் மிகவும் காதலையும் நட்பையும் புதிய திரைகதையில் வெளிபடுதிருகிறார். எல்லோரும் புதுமுகம் அனால் சிறப்பாக நடித்துள்ளனர்.குறிப்பாக நாயகி அருமை படத்துக்கு இசை மேலும் ஒரு பலம் என்று சொல்லணும் .

Leave a Reply