Saturday, October 12
Shadow

“ஜோக்கர்” புகழ் குரு சோமசுந்தரம், “ஓடு ராஜா ஓடு”

நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் கதை. நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் சந்திக்கையில் என்ன நேர்கிறது என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் திரைக்கதையை அமைத்து குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் படியாக எடுக்கப்பட்ட படமே odu-rajaodu

நீண்ட கால நண்பர்களும் L.V.பிரசாத் அகடமியின் பட்டதாரிகளான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் இப்படத்தை இணைந்து இயக்கியுள்ளனர். இயக்கம் மற்றுமன்றி இருவரும் தங்களது பங்களிப்பை மற்ற துறைகளிலும் செலுத்தியுள்ளனர்.

நிஷாந்த் ரவீந்திரன் – எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பு

ஜதின் ஷங்கர் ராஜ் – இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு

30 வருடங்களாக மிகவும் பிரபலமான நிறுவனமாக விளங்கும் மூலன் குருப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார், கலையின் மீது கொண்ட காதலால் திரைப்படத்துறையில் தடம் பதித்துள்ளார்.

சாருஹாசன், நாசர், “ஜோக்கர்” புகழ் குரு சோமசுந்தரம், ஆனந்த்சாமி, லக்ஷ்மி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வியாபாரி படத்தில் “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்” பாடலை எழுதிய பரிநாமன் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

Leave a Reply