‘ஜிகர்தண்டா’ படத்தில் இணைந்து நடித்த சித்தார்த்தும் பாபி சிம்ஹாவும் மீண்டும் இணைந்து இன்னொரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். ஆனால் இங்கல்ல. மலையாளத்தில். ஆம். ரத்தீஷ் அம்பாட் இயக்கத்தில் திலீப் நடித்துவரும் ‘கம்மார சம்பவம்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
சித்தார்த் இந்தப்பத்தில் நடிப்பது கடந்த மாதமே உறுதியாகவிட்ட நிலையில், இப்போது பாபி சிம்ஹாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
சித்தார்த்திற்கு மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்றாலும், பாபி சிம்ஹா மலையாளத்தில் ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் நடித்தவர் தான்.
நேரம் படத்தில் மலையாளத்திலும் ‘வட்டி ராஜாவாக நடித்த பாபி சிம்ஹா, அதன்பின்னர் பிவேர் ஆப் டாக்ஸ்’ என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அடுத்ததாக ஒரு வடக்கன் செல்பி’ படத்தில் சில வினாடிகளே வந்து செல்லும் கேரக்டரில் நட்புக்காக நடித்துக்கொடுத்தார்.
தமிழில் பிசியாகிவிட்டாலும் மலையாளத்தில் நல்ல கேரக்டரை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாபிசிம்ஹாவுக்கு இந்தப்படமும் கேரக்டரும், கூடவே திலீப்புடன் இணைந்து நடிப்பதும்