
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இருமுகன்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்திருந்தார். ஆரோ சினிமாஸ் வெளியிட்டது. இப்படம் மாபெரும்வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூலில் மிகபெரிய சாதனை நூறுகோடி வசூல் பட்டியலில் இடமும் பிடித்தது இருபத்திஆறாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் விக்ரமுக்கு மணிமகுடம் சூடுவதுபோல இந்த படம் அமையும் என்றும் கூறபடுகிறது .
இந்நிலையில், தற்போது இக்கூட்டணி மீண்டும் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இப்படத்தை தயாரிக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும், பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான ‘டோன் ப்ரீத்’ படத்தைத் தான் தமிழில் இக்கூட்டணி ரீமேக் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், படக்குழுவினர் இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை.
‘இருமுகன்’ படத்துக்குப் பிறகு, ‘சாமி 2’ படம் தொடங்கும் முன்பு ஒரு படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம். அப்படத்துக்காக சாக்ரடீஸ், மகிழ் திருமேனி, அருண் குமார் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கதைகளைச் சொல்லிவந்தார்கள். இறுதியாக அந்த வாய்ப்பு ஆனந்த் ஷங்கரிடமே கொடுத்திருக்கிறார் விக்ரம்.
ஆனந்த் ஷங்கர் படத்தை முடித்துவிட்டு, அடுத்தாண்டு தொடக்கத்தில் ஹரி இயக்கும் ‘சாமி 2’-ல் கவனம் செலுத்த இருக்கிறார் விக்ரம்.