Saturday, October 12
Shadow

தமிழ் வேண்டாம் மீண்டும் ஹிந்திக்கு போகும் பிரபு தேவா

கோலிவுட் மட்டுமல்லாது டோலிவுட், பாலிவுட்டிலும் இயக்குநராக ஜொலித்தவர் பிரபுதேவா. ஹிந்தியில் தொடர் தோல்வியால் தமிழுக்கு வந்த இவர் மீண்டும் ஹிந்திக்கு போகிறார் இவர்  இயக்கிய ‛ரவுடி ரத்தோர்’, ‛ஆர்.ராஜ்குமார்’ படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதன்பின்னர் அவர் இயக்கிய ஆக்ஷ்ன் ஜாக்சன், சிங்க் இஸ் பிலிங் படங்கள் பிரபுதேவாவிற்கு பெயரை பெற்று தரவில்லை.

இந்நிலையில் பிரபுதேவா, நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரபுதேவா சொன்ன கதை ஒன்று அபிஷேக் பச்சனுக்கு பிடித்ததையடுத்து அவர் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அபிஷேக் பச்சனின் தயாரிப்பு நிறுவனமான ஏ.பி கார்பரேஷன் தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு “லெப்டி” என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply