Tuesday, April 22
Shadow

ஒரு கிடாயின் கருணை மனு அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா?

குற்றமே தண்டனை படத்தை அடுத்து விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. இந்த படத்தை காக்கா முட்டை மணிகண்டனின் அசோசியேட் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். நாயகியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்துள்ளார்.

இவர் எமிஜாக்சன் உள்பட பல பிரபல நடிகை களுக்கு டப்பிங் பேசி வருபவர். இவர்களுடன் கவிஞர் விக்ரமதித்தன், ஜித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, சக்தி சரவணன், ஜெயராஜ், ஆரஞ்சு மிட்டாய் ஆறுமுகம் உள்பட 40 நடிகர் -நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரகுராம் இசையமைத்துள்ளார்.

இவர் மணிகண்டனின் குறும் படங்களுக்கு இசையமைத்தவர். வேல்முருகன் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்திற்கு சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் சங்கையா கூறுகையில்,

ஒரு கிடாயின் கருணை மனு படம் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி மட்டுமே இல்லாமல் இந்த படத்தில் நடித்துள்ள 40 கேரக்டர்களுக்கும் கதையில் பங்களிப்பு உள்ளது. இந்த தலைப்பை கேட்டதுமே கோயில்களில் ஆடு வெட்டுவது சம்பந்தமான கதை என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அதைப்பற்றி சொல்லவரவில்லை. சிறு தெய்வம் வழிபாடு முக்கியம். கல்லச்சரை தவறாக சொல்ல வில்லை.

மேலும், இந்த படம் அருப்புக்கோட்டை டு ராஜபாளையத்தில் டிராவலாகும் கதை. விவசாயியாக நடிக்கிறார் விதார்த். ஒரு புதுமாப்பிள்ளை- புதுமாப் பெண்ணை மையமாக வைத்து கதை நகர்கிறது. அவர்கள் வளர்க்கும் ஒரு ஆடும் முக்கிய கதாபாத்திரம். அந்த வகையில், ஒரு கிடாயின் கருணை மனு அங்கீகரிக்கப் பட்டதா? இல்லை நிராகரிக்கப்பட்டதா? என்பதுதான் இந்த படம். முக்கியமாக கோயில்களில் கிடா வெட்டுவது தப்பு, ரைட்டு என்று எதையும் நான் சொல்லவில்லை. அதனால்தான் டைட்டீலைகூட ரொம்ப யோசிச்சு ஒரு கிடாவின் கருணை மனு என்று வைத்துள்ளேன்.

மேலும், இந்த படத்தில் ஒரு புதுமை செய்திருக்கிறேன். அதாவது கொலை சிந்து என்றொரு பாடல் வைத்திருக்கிறேன. கொலை செய்து விட்டு பின்னர் அந்த கொலையைப் பற்றி பாடும் பாடல் இந்த படத்தில் உள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதிதாக இருக்கும் என்று கூறும் டைரக்டர் சுரேஷ் சங்கையா, தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இதையடுத்து ஒரு கிடாயின் கருணை மனு படத்தை கனடா, கேரளா என சில சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்புகிறோம். அதன்பிறகே படத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து முடிவு

Leave a Reply