சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன்.
தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் படத்தை உருவாக்கவுள்ளது.
இப்படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என பழைய கமல் பட டைட்டிலை வைத்துள்ளனர்.ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘ஒரு நாள் கூத்து’ புகழ் நிவேதா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.