Sunday, October 1
Shadow

ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கிடுச்சு

வருஷா வருஷம் உலகளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது

ஆஸ்கர் விழாவை அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1927 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது 36 பேர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த அகாடமி விருதில் வழங்கப்படும் ஸ்பெஷலான தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி. 13.5 இன்ச் உயரமுள்ள (34.3 செ மீ) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது.

அதை வழங்கும் இண்டர்நேஷல் பேமஸான இந்தாண்டுக்கான ஆஸ்கர் விழா ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

இதில் ஜோக்கர், ஐரிஷ்மேன், 1917, ஒன்ஸ் அபாண்ட் எ டைம் இன் ஹாலிவுட் ஆகிய திரைப்படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகள் பற்றிய சேதி இதோ..

சிறந்த தழுவல் திரைக்கதை

ஜோஜோ ராபிட் – டைகா வைடிடி

சிறந்த அசல் திரைக்கதை

பாரசைட் – பாங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வொன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்

ஹேர் லவ்
(Hair Love)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

டாய் ஸ்டோரி 4
(Toy Story 4)

சிறந்த உறுதுணை நடிகர்

பிராட் பிட் – ஒன்ஸ் அபாண்ட் எ டைம் இன் ஹாலிவுட்