
நவம்பர் 7ல் திரையரங்குகளில் ‘அதர்ஸ்’
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், மெடிக்கல் கிரைம் த்ரில்லராக அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் சிங் செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்க, ராமர் படத்தொகுப்பு, பிரதீப் சண்டைக் காட்சிகள், சந்தோஷ் நடன அமைப்பை கவனித்துள்ளனர்.
மேலும், ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படக்குழு அதன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
