பகிரி மிக துணிச்சலான படம் என்று சொல்லவேண்டும் இன்றய தமிழகத்துக்கு தேவையான முக்கியமான கதை என்றும் சொல்லணும் இந்த படத்தை எப்படி தணிக்கை குழுயிடம் இருந்து தப்பித்து என்று தெரியவில்லை அந்த அளவுக்கு துணிச்சலான கதை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும் இன்று நம் தமிழகம் அழிய முக்கிய காரணம் டாஸ்மாக் அதை பற்றிய கதை.
இந்த படத்தில் அறிமுகமாக பிரபு ரணவீரன் நாயகியாக ஷரவ்யா ,ரவிமரியா A.வெங்கடேஷ் T.Pகஜேந்திரன் K.ராஜன் மாரிமுத்து சூப்பர் குட் சுப்பிரமணி ஆதிரா மற்றும் பலர் நடிப்பில் பாடல்கள் யாசி கருணாஸ் ஒளிப்பதிவு அருணகிரி படத்தைபதயாரித்து இயக்கி இருப்பவர் இசக்கி கார்வண்ணன்
விவசாயம் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் ஹீரோ எங்கு சென்றாலும் வேலை இல்லை பேங்க்ல லோன் வாங்கி பூச்செடி பண்ணை யாரும் வாங்க வரவில்லை விரக்க்தியில் டாஸ்மாக் என்ற பெயரை நாஸ் மாக் என்று மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர் நாச மாக்யில் வேலை தேடும் ஹீரோ சேர்ந்தா நாஸ்மாக்யில் தான் வேலை சேருவேன் என்ற லட்சியம் ஏன் என்பதுக்கு சில உதாரணம் கொடுக்கும் இயக்குனர் இந்து லட்சம் லஞ்சம் கொடுத்து வேலையில் சேருகிறார் வேலை சேர்நத அன்றே ஹீரோ காதலி அப்பா எதிர் கட்சி காரங்களுடன் சேர்ந்து நடத்தும் போராட்டம் இதனால் கடை தொரக்கமுடியவில்லை வேறு எங்கு கடை கிடைக்குதோ அது வரை வேலை இல்லை என்று சொல்ல ஹீரோ தானே கடை தேட ஆரம்பிகுறார் அவருடன் காதலியும் அவரின் அமாவும் கடை தேடுகிறார்கள் வெங்கும் கடை கிடைக்கவில்லை கடைசியில் காதலியின் வீட்டை நாஸ்மாக் கடையாக மாற்றுகிறார்கள் காரணம் அரசாங்க வேலை என்பதுக்கு அனால் ஒரு சிலநாளில் மதுக்கடைகள் மூடப்படும் என்று அரசாங்க உத்திரவு வர ஹீரோ எல்லாம் போச்சே என் வாழ்கை போச்சே என்று அழுகிறார் அந்த நேரம் ஹீரோ அப்பா ஹீரோக்கு தம்பி இந்த நாச மாக் மூலம் நாட்டுக்கு மட்டும் இல்லை வீட்டுக்கும் கேடு விவசாயம் தான் நாட்டின் முதுகு எலும்பு என்பதை மிக அழகாக சொல்லி இருக்கும் படம் தான் பகிரி
நல்ல கதை அதை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் புதுமுகங்கள் எல்லோரும் அழகா நடித்துள்ளனர் . ரவி மரியா காமெடி படத்துக்கு பிளஸ் அதே போல் கருணாஸ் இசை பாடல்கள் அருமை நல்ல கதை இயக்குனர் திரைகதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் சிறந்த படமாக அமைந்து இருக்கும் .