Saturday, February 14
Shadow

ZEE5-ல் வெளியாகிறது ‘பராசக்தி’ – வரலாற்றுப் பின்னணியுடன் அரசியல் உணர்வுகளை பேசும் திரைப்படம்

ZEE5-ல் வெளியாகிறது ‘பராசக்தி’ – வரலாற்றுப் பின்னணியுடன் அரசியல் உணர்வுகளை பேசும் திரைப்படம்

முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, சமூக மற்றும் அரசியல் பின்னணியைக் கொண்ட கதைகளை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அரசியல் ஆக்ஷன்-டிராமா திரைப்படமான ‘பராசக்தி’, வரும் பிப்ரவரி 7 முதல் ZEE5 தளத்தில் டிஜிட்டல் வெளியீடாக வெளியாகிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை Dawn Pictures நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு கதை சொல்லுகிறது.

 

அடையாளம், மொழி மரியாதை மற்றும் சமூக விழிப்புணர்வு போன்ற கருப்பொருட்களை முன்னிறுத்தும் இப்படம், வரலாற்றுச் சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் இரண்டு சகோதரர்களின் உணர்ச்சி மிகுந்த பயணத்தை வெளிப்படுத்துகிறது. நடிகர் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் கொள்கை உறுதியான இளைஞர் ‘செழியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா கூறியதாவது, மக்களின் அடையாளம், மொழி மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து பேசும் கதையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘பராசக்தி’ உருவானது. ஒரு அரசியல் இயக்கத்தை மட்டும் பேசாமல், அது சாதாரண மக்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை இப்படம் எடுத்துரைக்கிறது என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன், ‘செழியன்’ கதாபாத்திரம் தனது நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான மற்றும் சவாலான வேடங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாகவும், நம்பிக்கை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகை ஸ்ரீலீலா, இப்படத்தில் ‘ரத்னமாலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வேடம் அமைதியான உறுதியையும் மனிதநேய உணர்வையும் பிரதிபலிப்பதாக இருப்பதால், இப்படத்தில் இணைந்தது தனது திரைப்பட பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமூக விழிப்புணர்வு, சகோதரத்துவம் மற்றும் எதிர்ப்பின் உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை, ரசிகர்கள் பிப்ரவரி 7 முதல் ZEE5 தளத்தில் காணலாம்.
ZEE5 குறித்து: ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் கீழ் செயல்படும் ZEE5, இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். பல மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் தொடர்கள் மற்றும் இசை வீடியோக்களை வழங்கி வரும் ZEE5, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தரமான பொழுதுபோக்கை வழங்கி வருகிறது.

‘Parasakthi’ to Premiere on ZEE5 – A Political Drama Rooted in Historical Events

Leading digital streaming platform ZEE5 continues its efforts to bring socially and politically relevant stories to audiences. As part of this initiative, the much-anticipated political action drama ‘Parasakthi’ will have its digital premiere on February 7 on ZEE5. The film will be available not only in Tamil but also in Telugu, Malayalam, and Kannada.

Directed by National Award-winning filmmaker Sudha Kongara, the film is produced by Aakash Baskaran under the banner of Dawn Pictures. The movie is inspired by significant political and social events in Tamil Nadu’s history and is set against the backdrop of the 1965 Anti-Hindi Imposition agitation.

Focusing on themes such as identity, linguistic pride, and social awareness, the film narrates the emotional journey of two brothers who get drawn into a historic political movement. Actor Sivakarthikeyan plays the lead role of Sezhiyan, a principled young man actively involved in the protest against Hindi imposition.

Speaking about the film, director Sudha Kongara said that Parasakthi was born out of a strong desire to tell a story about people’s identity, language, and rights. She added that the film does not merely depict a political movement but also explores how such movements impact the lives of ordinary people.
Actor Sivakarthikeyan described Sezhiyan as one of the most meaningful and challenging roles of his career. He expressed confidence that the character, which represents courage, responsibility, and conviction, will resonate well with audiences.

Actress Sreeleela, who plays the character Rathnamala, stated that the role reflects quiet strength and compassion. She described being part of a culturally and historically significant film as a major milestone in her career.
Audiences can watch this intense story of resistance, brotherhood, and identity on ZEE5 starting February 7.

About ZEE5: ZEE5, a part of ZEE Entertainment Enterprises Limited, is one of India’s leading digital video streaming platforms. Offering thousands of films, television shows, web originals, and music videos in multiple languages, ZEE5 delivers quality entertainment to audiences worldwide.