Thursday, June 1
Shadow

எனக்கு முக்கிய திருப்புமுனை படமாக அமையும் ‘பத்து தல’ – நடிகர் கெளதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘பத்து தல’ உலகம் முழுவதும் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவதால் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 

நடிகர் கௌதம் கார்த்திக் கூறும்போது, ​​“ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. ‘பத்து தல’ திரைப்படம் எனக்கு அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான படம். முழு படமும் மிகவும் சவாலானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இது முழுமையான ஒரு டீம் வொர்க். அணியில் ஒருவர் இல்லாமல் கூட, இந்தப் படம் திட்டமிட்டபடி முழுமையாக முடித்திருக்க முடியாது. இரண்டு கொரோனா காலக்கட்டங்கள் உட்பட பல கடினமான விஷயங்களையும் நாங்கள் கடந்துதான் வந்திருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் ஜெயந்திலால் கடா மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். சிலம்பரசன் அண்ணன் இல்லாவிட்டால் ‘பத்து தல’ திரைப்படம் எங்களுக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்திருக்கும். எனக்காக அவர் சிரமப்பட்டு, கடினமான சவால்களைச் சந்தித்த விதம் என்னை வாயடைக்கச் செய்கிறது. அவர் உடல் அளவில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஒரு படத்திற்காக மீண்டும் எடையை அதிகரிக்க யாராவது தைரியமாக முடிவு செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இது கற்பனைக்கு அப்பாற்பட்டது! அவர் அதைச் செய்தார். அவர் என்ன செய்கிறார் என்பதற்கான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் தான் இவ்வளவு அற்புதமான ரசிகர் பட்டாளத்தை அவருக்குத் தந்துள்ளது. அவரது நடிப்பு திரையில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

ப்ரியா பவானி சங்கர் ஒரு அற்புதமான கோ- ஸ்டார். படப்பிடிப்புக்கு சரியாக வரும் நேரமும் ஆர்வமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இயக்குநர் கிருஷ்ணா சார் தூணாக இருந்து முழு படத்தையும் தோளில் சுமந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பல நடிகர்களின் காட் ஃபாதர். நான் எப்போதும் அவரை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே பார்க்கிறேன். அத்தகைய ஜாம்பவானுடன் பணியாற்றுவது எனக்கு ஆசீர்வாதம்! மேலும் இந்த படத்தில் அவர் எனக்காக அழகான பாடல்களை கொடுத்துள்ளார்”.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் படம் ‘பத்து தல’. சிலம்பரசன் டிஆர், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

 

Actor Gautham Karthik looks completely excited as his much-awaited film ‘Pathu Thala’ is getting ready for the worldwide theatrical release on March 30, 2023. The actor shares his experience of working with actor Silambarasan, director Obeli N Krishna, and the entire team in this movie.

Actor Gautham Karthik says, “Just like how a debut film is important for an actor, a breakthrough project becomes mandatory for them. Pathu Thala is more of an emotional essence to me. The whole process has been so challenging and meaningful. It’s complete teamwork, and without a single team member, this project would have not been completed perfectly as planned. We had to go through lots of unbearable odds including a couple of pandemic phases. My heartiest thanks to producers Jayantilal Gada and K.E.Gnanavelraja for their kind gesture of supporting me. If not for Silambarasan brother, Pathu Thala would have remained an unfulfilled project. The way, he strained and went through excruciating challenges for my sake leaves me speechless. He had gone through a physical transformation, and I am not sure if anyone would boldly decide to gain weight again for a project. This is beyond imagination, and he made it happen. His dedication and passion for what he does is the reason why he enjoys such an amazing fan base. His screen presence and performance will be a magnificent treat for the fans. Priya Bhavani Shankar has been a wonderful co-star. Her punctuality and sincerity are inspiring. Director Krishna sir is the pillar and has carried the entire project on his shoulder. AR Rahman sir is considered the God Father of many actors, and I always look up as a great inspiration. It’s a blessing to be working with such an adorable icon, and I am cherishing the beautiful songs he has given for me in this movie.”

Pathu Thala is produced by K.E.Gnanavelraja of Studio Green and Jayantilal Gada of Pen Studios and is directed by Obeli N Krishna. The film features Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, Gautham Vasudev Menon, Kalaiyarasan, Teejay Arunasalamm, Anu Sithara & others in the star cast. AR Rahman composed the music, Farook j Basha handled the cinematography, Praveen KL has taken care of editing and Milan is the art director of this film.