
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது கேங்ஸ்டர் கதையில் மீண்டும் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரன் தற்போது பேட்ட படத்தில் இணைந்துள்ளார். இவர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். அந்த போட்டோவில் உள்ள ரஜினியின் வலது கையில் ஒரு செம்பு கம்பி உள்ளது. அதில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
1975ல் இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அவசர சட்டத்தின்கீழ் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் ரவுடிகள் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இப்போது ரஜினியின் கையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பதால் இந்த படம் மிசா சட்டம் பிரகடனம் செய்யப்பட்டபோது நடக்கும் கதையில் உருவாகலாம் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
மேலும் பேட்ட படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த படியாக காசியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அங்கு ரஜினி-திரிஷா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாகிறது