திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் என்று இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவே நேசித்தேர்கள் இத்தவை பேரா என்பதை, இன்று வரை விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் என் தொலைபேசி பறை சாற்றுகிறது. என் இழப்பை தங்கள் வீட்டு இழப்பாக கருதி, அப்பா இந்த செய்தியை பல ஊடகங்களில் கொண்டு சென்ற அனைவரும் நன்றி.
திட்டமிடுதல் என்பது நான் அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு விஷயம் அது ஒரு படப்பிடிப்பாகட்டும், இல்லை தன்னுடைய இறுதி யாத்திரை ஆகட்டும், எல்லாவம அழகாக யோசித்து நேர்த்தியாக திட்டமிடுவது அப்பாவின் பலம்.
படப்பிடிபை அப்பா, திட்டமிடும் நேரில் பார்த்து பிரமித்த எனக்கு அவர், தன் இறுதி யாத்திரை எப்படி இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறிய போது மகனாக நொறுங்கி போனேன்.
எங்கு தன்னை வைக்க வேண்டும், என்ன உடுத்த வேண்டும், வருபவர்களை எப்படி நடத்த வேண்டும்… இன்னும் என்னென்னமோ…. எனக்குதான் கேட்க மனதளவில் தைரியமில்லை….
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்… பாழாய் போன கொரோனா, உயிர்களை மட்டும் பறிக்கவில்லை, மனிதர்களின் கடைசி நிமிடங்களையும் கொண்டு விடுகிறது.
நம்முடன் பழகிய, நம்முடன் பயணித்த, நம்முடன் வேலை செய்த, நமக்கு வாழ்வு கொடுத்த ஜி.என். ரங்கராஜனை பலர் கடைசியாக பார்க்க முடியாமல் செய்து விட்டது கொரோனா.
நேரில் வரமுடியாவிட்டாலும், அப்பாவை கடையாக பார்க்க முடியாமல் பொன் உங்கள் வலியை உணர்கின்றேன்…. நிச்சயம் அப்பாவின் அன்பும், ஆசியம் என்றும் உங்களுக்கு இருக்கும்.
இன்பத்தில் ஒன்று கூடவும், துன்பத்தில் தோள் கொடுக்கவாவது கொரோனா ஒழிய வேண்டும்..
அப்பா… நீங்கள் வழிக்காட்டிய பாதையில் பயணிக்கிறேன்…. அருகில் நீங்கள் இருந்து என் வாழ்வை திட்டமிட்டு என்னை வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் என்று குறிப்பிட்டுள்ளார்.