
2K தலைமுறை காதலை நகைச்சுவைத் தொனியில் பேசும் ‘பூக்கி’ – காதலர் தின வெளியீட்டிற்கு தயாராகும் புதிய ரொம்-காம்!
தமிழ் சினிமாவில் இளைஞர்களை குறிவைத்து உருவாகும் காதல் கதைகள் தொடர்ந்து வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், 2K தலைமுறையின் காதல் உணர்வுகள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் பிரேக்கப் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பூக்கி”.
Vijay Antony Film Corporation நிறுவனத்தின் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் இப்படம், இளம் நடிகர் அஜய் திஷான் கதாநாயகனாக நடிக்கும் ரொமான்ஸ்–காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கியுள்ள இந்த படம், உலகம் முழுவதும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கேமராவுக்கு பின்னால் இருந்து இயக்குநராக உயர்ந்த கணேஷ் சந்திரா
ஒளிப்பதிவாளராக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற கணேஷ் சந்திரா, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திரைப்படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்து வெளியீட்டிற்கு கொண்டு வந்தது படக்குழுவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இயக்குநரின் பார்வையில், இன்றைய இளைஞர்களின் காதலில் பெற்றோர் தடையாக இல்லாமல், காதலர்களே உறவுகளை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள் என்ற கருத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் இசை – ரசிகர்களுக்கு சிறப்பு பரிசு
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தனித்துவம் பெற்ற விஜய் ஆண்டனி, ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இடைவெளிக்குப் பிறகு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இசை, கதையை முன்னெடுக்கும் முக்கிய கூறாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

புதிய முகங்களும், அனுபவமிக்க நடிகர்களும் இணையும் நட்சத்திர பட்டியல் ‘மார்கன்’ படத்தில் கவனம் பெற்ற அஜய் திஷான் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தனுஷா அறிமுகமாகிறார். மேலும், லக்ஷ்மி மஞ்சு, பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, அஷ்வின் ராம், பிரியங்கா மஸ்தானி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படக்குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பு
திரைப்படத்தின் உருவாக்கத்தில் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவை கணேஷ் சந்திரா மேற்கொண்டுள்ள நிலையில்,
கதை, திரைக்கதை – புதிய பரிதி
இசை, எடிட்டிங் – விஜய் ஆண்டனி
கலை இயக்கம் – பிரகதீஸ்வரன்
ஆடை வடிவமைப்பு – மாளவிகா செல்வம்
நடனம் – ஹரிகிரண்
படத்தின் தொழில்நுட்ப தரத்தை உயர்த்தியுள்ளனர்.
பிரேக்கப்பைத் தாண்டி வாழ்வை மீண்டும் கண்டுபிடிக்கும் இளைஞனின் பயணம்
‘பூக்கி’ திரைப்படம் ஒரு காதல் கதையாக மட்டும் இல்லாமல், பிரேக்கப்பை சந்திக்கும் இளைஞன் அதிலிருந்து மீண்டு தனது வாழ்க்கையை எப்படி முன்னேற்றிக் கொள்கிறான் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த திரைக்கதையில் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.

காதலர் தினத்திற்கான இளைஞர்களின் திரை விருந்து இளைஞர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதையுடன், இசை, நகைச்சுவை மற்றும் காதல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘பூக்கி’, இந்த ஆண்டின் காதலர் தின வெளியீடாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

‘Pooki’ – A Rom-Com Exploring 2K Generation Love Set for Valentine’s Day Release
Tamil cinema continues to introduce youth-centric romantic entertainers, and joining that trend is the upcoming film “Pooki”, which explores modern relationships, breakups, and emotional struggles of the 2K generation.
Produced by Fathima Vijay Antony under the banner of Vijay Antony Film Corporation and presented by Meera Vijay Antony, the film stars Ajay Dhishan in the lead role. Directed by debutant Ganesh Chandra, the romantic comedy is scheduled for a worldwide theatrical release on February 13, 2026, as a Valentine’s Day special.
Ganesh Chandra Steps from Cinematography to Direction
Ganesh Chandra, who has previously worked as a cinematographer in several Tamil and Telugu films, makes his directorial debut with Pooki. The film was completed in just six months, reflecting the team’s strong coordination and dedication.
The director highlights that in today’s generation, parents are no longer the major obstacle in love relationships; instead, lovers themselves create complications. This concept forms the central theme of the film.

Vijay Antony Returns as Music Composer
Multi-talented actor and composer Vijay Antony has composed music for this film after a long gap, fulfilling a long-standing request from his fans. The team states that music plays a crucial role in narrating the film’s emotions and storytelling.
Star Cast Blending Fresh Faces and Experienced Artists
Following appreciation for his performance in Morgan, Ajay Dhishan plays the male lead, while Dhanusha makes her debut as the female lead. The film also features Lakshmi Manchu, Pandiarajan, Sunil, Indhumathi Manikandan, Vivek Prasanna, Black Pandi, Adithya Kathir, Bigg Boss Sathya, Ashwin Ram, Priyanka Masthani, and others in important roles.

Strong Technical Team
The film’s technical team includes:
Story & Writing – Puthiya Paridhi
Direction & Cinematography – Ganesh Chandra
Music & Editing – Vijay Antony
Art Direction – Pragadeeswaran
Costume Design – Malavika Selvam
Choreography – Harikiran
A Youthful Story About Life After Breakup
Pooki is not just a love story. It focuses on a young man dealing with heartbreak and how he rebuilds his life after a breakup. The film blends emotional storytelling with humor and engaging screenplay elements.

A Valentine’s Day Treat for Youth and Families
With a combination of romance, comedy, music, and relatable emotions, Pooki aims to entertain both youngsters and family audiences. The film is expected to be a special Valentine’s Day release this year.
