Saturday, April 26
Shadow

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணைய போகும் பிரபுதேவா

தமிழ் சினிமாவை விட்டு முழுவதும் விலகி இருந்த பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் விஜய்யின் விருப்பத்துக்கு இணங்க தேவி படத்தில் நடித்தார். விருப்பமும் இல்லமால் ஒரு பயத்துடன் தான் நடித்தார் ஆனால் அந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது இதன் மூலம் மீண்டும் தமிழில் தயாரிப்பதோடு நடிக்கவும் முடிவெடுத்துள்ளார் அதன் படி தற்போது இரண்டு படம் நடித்து வருகிறார்.

பிரபுதேவா தனது அடுத்த படத்தில் தேசிய விருது வென்ற இயக்குநருடன் இணைப்போவதாக கூறப்படுகிறது. அந்த இயக்குநர் யார் என்பதை கீழே பார்க்கலாம்.நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பிரபுதேவா நடித்து வெளிவந்த ‘தேவி’ படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரபுதேவா தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், `தேவி’ படத்தில் நடித்த தமன்னாவுடன் தனது அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்த வரிசையில் புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த கதையான `யங் மங் சங்’ படத்திலும் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒருசில படங்களை தனது பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்தும் வருகிறார். அதன்படி, பிரியதர்சன் இயக்கத்தில் பல விருதுகளை வென்ற `சில நேரங்களில்’ படத்தையும் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் `வினோதன்’ படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply