ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவே என்ற பாடல் காட்சியில் நடித்து பிரபலமாகி இருப்பவர் நடிகை பிரியா வாரியர்.
ஒரே பாடலின் மூலம் மலையாள மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதுமட்டுமின்றி இந்திய அளவிலும் பிரலமாகி இருக்கும் பிரியா வாரியரை கூகுள் இணையதளத்தில் தேடுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை உச்சத்தில் இருந்த இந்தி நடிகை சன்னிலியோனையும், பிரியா வாரியர் பின்னுக்கு தள்ளிவிட்டாராம்.
அதுமட்டுமா, இவரை இன்ஸ்டாகிரமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது 38 லட்சத்தை தாண்டிவிட்டது. இதற்கு முன்பு இந்தி நடிகைகள் கத்ரினா கைப், திபீகா படுகோனே ஆகியோர் தான் முன்னணியில் இருந்தனர். அவர்களும் இப்போது பின்தங்கிவிட்டனர்.
இவ்வுளவு பிரபலங்களுக்கு மத்தியில் பிரியா வாரியருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால் அனைத்து புகார்களையும் தள்ளுபடி செய்யும்படி பிரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.