கடந்த வாரம் கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியானது அதில் ஒரு சில படங்கள் தான் பாக்ஸ் ஆபீஸில் இடம்க் பிடித்தது அதில் முதல் இடத்தை பிடித்த படம் என்றால் அது கேரளா சூப்பர்ஸ்டார் முழுமையான நடிகர் என்று சொல்லப்படும் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிக பெரிய வெற்றி படம் என்றால் அது புலி முருகன் என்று தான் சொல்லணும் இந்த படத்தை மீண்டும் ரீமேக் தமிழில் பண்ணவேண்டும் என்றால் அது சாத்தியம் கிடையாது எனவே இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தனர்.
இந்த டப்பிங் வேலையை யாரிடம் கொடுப்பது என்று யோசித்து பலரிடம் ஆலோசித்து கடைசியாக தேடிபிடித்த சிறந்த நபர் என்று கேள்விப்பட்டு இந்த வேலையை எழுத்தாளர் R.p.பாலாவிடம் ஒப்படைத்தனர். இந்த பொறுப்பை இயக்குனரும் எழுத்தாளர்மான R.P.பாலா ஏற்று கொண்டார் இந்த வேலையை செய்ய சம்மதித்தபோது இந்த படம் நல்ல வரவேண்டும் என்றால் எனக்கு முழு சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்று நிர்பந்தத்தோடு வேலையை ஆரம்பித்தார். ஒரு டப்பிங் படம் என்றால் குறைந்தது பத்து நாட்களில் முடித்து விடலாம் ஆனால் இந்த கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேல் பணிபுரிந்தனர் அவரும் அவர் குழுவினரும் காரணம் இது டப்பிங் படம் என்று யாரும் சொல்லிவிடகூடது என்று மிகவும் மெனகேடல்செய்து இந்த படத்தை உருவாகினார்கள் இந்த குழு
உழைப்புக்கு எப்பவும் வெற்றி என்பது இறைவனின் இயற்கை நீதி அது இவர்களுக்கு கிடைத்தது என்று தான் சொல்லணும் படம் பார்த்தவர்கள் அனைவரும் R.p.பாலாவையும் அவரின் குழுவைம் பாராட்டினார்கள் காரணம் படம் அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக வந்தது தான் காரணம். அது மட்டும் இல்லாமல் தமிழில் படம் மிக பெரிய வெற்றியையும் பெற்றது சென்ற வார பாக்ஸ் ஆபீசியில் முதல் இடம் பிடித்த படம் என்ற பெயரும் வர்த்தகரீதியாக பெரிய வசூலையும் பெற்றுகொடுத்துள்ளது. இந்த சந்தோசத்தை தன் மொத்த குழுவுடன் படம் பார்த்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்