
ராணா தமிழில் பாகு பலி மூலம் தமிழியில்ச பிரபலமான ராணாஅதற்கு முன் அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்து இருந்தாலும் பாகுபலி தான் அவரை தமிழ் பிரபலமாகியது அதற்கு முன்னே ரசிகர்களுக்கு அவரை த்ரிஷா காதலரா தெரியும் இதுவரை இரண்டாம் ஹீரோவான ராணா தமிழில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.கழுகு , சவாலே சமாளி சிவப்பு படங்களின் இயக்குனர் சத்யசிவா தற்போது ராணா நடிக்கும் இருமொழி (தமிழ், தெலுங்கு) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ‘மடை திறந்து’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரயிலில் நடைபெறுவது போன்ற சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. தொடரியில் தனுஷும் இதே போன்று ரயிலில் பல சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் கதை 1940-களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ரெஜினா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.