ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.
இதன் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் கடந்த இரு மாதங்களாக படமாகி வந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் ரஜினி மீண்டும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாகும்.
மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும் இதைதொடர்ந்து டீசர் ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல் படம் அடுத்த ஆண்டு தீபாவளியில் திரைக்கு வருமாம்.
அது மட்டுமன் இல்லாமல் ரஜினின் பாட்ஷாவை மீண்டும் புது பொலிவுடன் 5.1 போன்ற தொழில் நுட்பங்களுடன் டிஜிட்டல் போன்றவை செய்து மீண்டும் ரிலீஸ் செய்யச திட்டமிட்டுள்ளது.