Tuesday, April 30
Shadow

பாபா ரீ-ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி ரஜினியே தயாரித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரஜினி மிகவும் எதிர்பார்த்த இப்படம் அவருக்கு திருப்தியை கொடுத்த படமும் கூட.

இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரஜினி நடித்த பாபா(BABA) திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு பல மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை காண ரஜினி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு திரண்டனர். அதிகாலை காட்சி எல்லாம் திரையிடப்பட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் காலை முதலே திரண்டு படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் ஒருசில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஏழு மந்திரங்களுக்கு பதில் 5 மந்திரங்கள்‌ என மாற்றப்பட்டுள்ளது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் கூட்டமும் இப்படத்தை தற்போது கொண்டாடி வருகின்றனர்.