![](https://www.cinemapluz.com/wp-content/uploads/2018/01/Ra-1.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த மாதம் அறிவித்தார். அதிலிருந்து பல கட்சித் தலைவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் தமிழரசன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இது குறித்து பேசிய தமிழரசன், ‘ அடித்தட்டு மக்களிடம் செல்வாக்கை பெற்றவர் ரஜினி. மக்களுக்கு உழைக்க ரஜினி அதிக ஆர்வத்துடன் உள்ளார். தலித் அரசியல் குறித்து ரஜினியுடன் பேசினேன்.’ என்று கூறீனார்.