Tuesday, September 10
Shadow

ரஜினி-கமல், விஜய்-அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம்பிடித்தார் – ரெமோ நன்றி விழாவில் வினியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணி

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான சிவகார்த்திகேயனின் ரெமோ மிகபெரிய வெற்றியடைந்தது. இதற்கு நன்றி சொல்லவேண்டும் என்று நன்றி விழா இன்று சென்னையில் உள்ள மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடைபெட்ட்றது இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்டனர் அதேபோல் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் விநியோகிஸ்தர்கள் அனைவரையும் மேடை எற்றி மரியாதை செய்தார் படத்தின் தயாரிப்பாளர் R.D. ராஜா பின்னர் நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர் விநியோகிஸ்தர்கள் சார்பாக பேசிய திருப்பூர் சுப்ரமணி தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம்பிடித்தார். காரணம் இவரின் உழைப்புமட்டும் இல்லை இவரை நம்பி பணம் போட்டவர்கள் நஷ்டம் என்ற வார்த்தையை கேட்டது இல்லை என்று கூறினார்.

பின்னர் படத்தில் பங்கு பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைவரையும் பற்றியும் குறிப்பாக தயாரிப்பாளர் R.D. ராஜா அடுத்து இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் P.C ஸ்ரீராம் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தனர்.

அனைவரும் பேசி முடித்த பின் கடைசியாக பேசிய சிவகார்த்திகேயன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசினார் அதற்க்கு காரணம் ஒரு சிலர் இந்த படத்தை முடிக்கவிடாமல் சதிசெய்ய முயற்சி செய்துள்ளனர் அதற்காக கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மேடையில் அழுதார் அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் வெற்றிக்காக கடந்த இரண்டு வருடங்களாக சரியாக சாபிடாமல் தூங்காமல் உழைத்தவர் தயாரிப்பாளர் ராஜா நான் கூட இந்த படத்துக்கு உழைக்கவில்லை அந்த அளவுக்கு உழைத்துள்ளார் அவரை அவர் வேலையை செய்யவிடாமல் ஒரு சிலர் முயற்சித்தனர் ஏன் நாங்க என்ன பண்ணோம் உங்களை நாங்கள் எந்த தொந்தரவும் செய்யவில்லை நான்களுண்டு எங்கள் வேலையுண்டு என்று தானே உழைத்தோம் எங்கள் உழைப்புக்கு மக்களும் ஊடகங்களும் வெற்றி என்ற பரிசை தந்தனர் அவர்களுக்கு தலை வணங்குறோம் என்றார் சிவகார்த்திகேயன் .

Leave a Reply