
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி மாபெரும் வசூல் சாதனை செய்து விட்டது. இப்படத்தை தொடர்ந்து இவர் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது இன்னும் சிலகாட்சிகள் மட்டும் தான் ரஜினியை வைத்து எடுக்க வேண்டியதுள்ளது . அக்ஷய் குமார் பகுதியும் பெரும்பாலும் முடிவடைந்ததுள்ளதாம். மீண்டும் அக்ஷய் குமாருடன் கிளைமாக்ஸ் மற்றும் சிலஸ் காட்சிகள் வரும் மாதம் படபிடிப்பு தொடங்கயுள்ளதாம். இதற்குள் ரஜினியின் அடுத்த இயக்குனர் யார் என்ற செய்தி கசிந்துள்ளது .
கபாலி கதையை கேட்பதற்கு முன் கௌதம் மேனனிடம் ரஜினி கதை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.